தமிழக பஸ்கள் ஓடத் துவங்கின

Subscribe to Oneindia Tamil

ஓசூர்:

நடிகர் ராஜ்குமார் கடத்தல் தொடர்பாக ஏற்பட் வன்முறையால் தமிழகத்திலிருந்து, பஸ்கள் வருவதுதடைபட்டிருந்தது. இப்போது பெங்களூரில் இயல்பு நிலை திரும்பி விட்டதால் பெங்களூருக்கு பஸ்கள் ஓடத்தொடங்கின.

கடந்த ஞாயிற்றுக்கிழமை ராஜ்குமார் வீரப்பன் கும்பலால் கடத்திச் செல்லப்பட்டார். இதனால் பெங்களூர் உள்படபல பகுதிகளில் கலவரம் வெடித்தது. வன்முறைக் கும்பல்களின் தாக்குதலால், தமிழ்நாடு-கர்நாடாகா எல்லைப்பகுதிகளில் பதட்டம் ஏற்பட்டது. தமிழகத்திலிருந்து வந்த பஸ்கள், வாகனங்கள் மீது கல்வீச்சு நடந்தது.

இதனால் ஓசூர் பகுதியுடன் தமிழக பஸ்கள் நிறுத்தப்பட்டன. பெங்களூரில் இருந்து எந்த வாகனமும் ஓசூருக்குவரவில்லை. திங்கள், செவ்வாய் ஆகிய இரண்டு நாட்களும் இதே நிலை தொடர்ந்தது. இந்த நிலையில்,புதன்கிழமை முதல் பஸ் போக்குவரத்து சீரானது.

ஓசூர் பஸ் நிலையத்திலிருந்து கர்நாடக மாநில அரசு பஸ்களில் பயணிகள் பெங்களூர் சென்றனர். எந்தஅசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை. இதனால் தனியார் பஸ்களும் பெங்களூருக்கு செல்ல ஆரம்பித்தன.தமிழ்நாட்டிலிருந்து லாரிகளும் பெங்களூருக்குச் செல்ல ஆரம்பித்தன. தற்போது பஸ் போக்குவரத்து சீராகஉள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+