வீரப்பன் கோரிக்கைகளை பரிசீலிப்போம்: கர்நாடகா
பெங்களூர்:
வீரப்பனால் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமார் மற்றும் அவரது உறவினர்கள் மூன்று பேரையும் பத்திரமாக மீட்பதற்காக அவர் வைக்கும்கோரிக்கை குறித்து பரிசீலனை செய்ய கர்நாடக அரசு தயாராக இருக்கிறது காவல்துறை அமைச்சர் மல்லிகார்ஜூன கார்கே கூறியுள்ளார்.
பெங்களூரில் வியாழக்கிழமை நடந்த அமைச்சரவைக் கூட்டத்திற்குப்பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:
ஜூலை 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேர் வீரப்பன் கூட்டாளிகளால் கடத்தப்பட்டனர். அவர்களை பத்திரமாக மீட்கும் முயற்சியில் இருமாநில அரசுகளும் இறங்கியுள்ளது. அரசுத் தூதராக வீரப்பனுடன் பேச்சுவார்த்தை நடத்த நக்கீரன் கோபால் காட்டுக்குச் சென்றுள்ளார்.
அவர் வீரப்பனின் கூட்டாளிகளைத் தொடர்பு கொண்டுள்ளார். மூட்டுவலிக்காக சிகிச்சை பெற்று வரும் அவருக்குத் தேவையான மருந்து மாத்திரைகள்கோபால் மூலம் கொடுத்தனுப்பப்பட்டு விட்டன. கோபால் வீரப்பனின் கூட்டாளிகள் மூலம் அவற்றைக் கொடுத்துவிட்டார்.
அமைச்சரவை கூட்டத்தில் ராஜ்குமாரை மீட்பது குறித்து ஆலோசிக்கப்பட்டது. கூட்டத்தில், வீரப்பன் வைக்கும் கோரிக்கைகளை நிறைவேற்றத்தயாராக இருப்பதாக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்தார். கர்நாடகத்தில் தடா சட்டத்தின் கீழ் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களை விடுவிப்பது குறித்துகர்நாடக அரசு பரிசீலனை செய்யும்.
முதலில் வீரப்பன் தனது கோரிக்கைகளை முன்வைக்கட்டும். அதன்பிறகு அவை குறித்து கர்நாடக அரசு பரிசீலிக்கும். அமைச்சரவையில் சட்டம்-ஒழுங்குநிலை குறித்து விவாதிக்கப்பட்டது. கர்நாடக மாநிலத்தில் முழு அமைதி திரும்பி வருகிறது. எந்த வித அசம்பாவிதச் சம்பவமும் நடக்கவில்லை என்றார்கார்கே.
யு.என்.ஐ.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications