இந்த வாரம்
சென்னை:
குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட 15 தரமான தமிழ்ப் படங்களுக்கு ரூ.75 லட்சம்மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநதி அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கை:
குறைந்த செலவில் தரமான படங்களைத் தயாரிக்கும் தயாரிப்பாளர்களைஊக்கப்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் சில படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுஅவற்றுக்கு மானியம் அளிக்கப்படுகிறது.
முதல்வர் கருணாநிதியால் அறிமுகப்படுத்தப்பட்ட இத் திட்டத்தின் கீழ் 1989-ம்ஆண்டு முதல் மானியம் வழங்கப்பட்டு வருகிறது. 1996-ம் ஆண்டில் 28படங்களுக்கும், 1997-ல் 11 படங்களும் தேர்வு செய்யப்பட்டன.
1998-ம் ஆண்டில் குறைந்த செலவில் தயாரிக்கப்பட்ட தரமான படங்களைத் தேர்வுசெய்ய நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம் தலைமையில் தனிக் குழு அமைக்கப்பட்டது.
1998-ல் 70 நேரடி தமிழ்த் படங்கள் வெளியாகின. இதில் மானியம் கோரி 23படங்களின் தயாரிப்பாளர்கள் விண்ணப்பித்திருந்தனர். மானியம் வழங்கும்திட்டத்தின் கீழ் தகுதி பெற்ற 22 படங்களை தேர்வுக்குழு பார்வையிட்டு அதில் 15படங்களுக்கு மானியம் வழங்கலாம் என்று அரசுக்குப் பரிந்துரை செய்தது.
சொர்ணமுகி, கிழக்கும் மேற்கும், சேரன் சோழன் பாண்டியன், குருபார்வை,பகவத்சிங், கும்பகோணம் கோபாலு, கோல்மால், கவலைப்படாதே சகோதரா, வெட்டுஒண்ணு துண்டு ரெண்டு, உயிரோடு உயிராக, பொன்மானைத் தேடி, இனி எல்லாம்சுகமே, கலர் கனவுகள், சந்தோஷம், நிலாவே வா ஆகிய 15 படங்கள் மானியம் பெறதேர்வு செய்யப்பட்டுள்ளன.
இவற்றுக்குத் தலா ரூ. 5லட்சம் வீதம் மொத்தம் ரூ. 75 லட்சம் வழங்கப்படும். ஆகஸ்ட்10-ம் தேதி வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் திரைப்பட விருதுகள் வழங்கும்விழாவில் இந்த மானியத் தொகைகள் வழங்கப்படும்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications