நலமாக இருக்கிறேன்...ராஜ்குமார் பேசிய கேசட் வந்தது
சென்னை:
நான் நலமாக இருக்கிறேன். கர்நாடகத்தில் ரசிகர்கள் யாரும் கலவரத்தில் ஈடுபட வேண்டாம் என்று சந்தனக் கடத்தல் வீரப்பனின் பிடியில் உள்ள நடிகர்ராஜ்குமார், அனுப்பியுள்ள கேசட்டில் கூறியுள்ளார்.
நடிகர் ராஜ்குமார் உள்பட 4 பேரை வீரப்பன் கூட்டாளிகள் ஞாயிற்றுக்கிழமை கடத்திச் சென்றனர். சத்தியமங்கலம் வனப்பகுதியில் அவர்கள் பிணைக்கைதிகளாக வைக்கப்பட்டுள்ளனர். வீரப்பனை நேரில் சந்தித்துப் பேசி கடத்தப்பட்டவர்களை மீட்டு வருவதற்காக, தமிழக-கர்நாடக அரசுகளின் தூதுவராகநக்கீரன் வாரப்பத்திரிக்கை ஆசிரியர் கோபால் காட்டுக்குச் சென்றுள்ளார்.
இந்த நிலையில் ராஜ்குமார் பேசிய ஆடியோ கேசட் தமிழக அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. கோபால் மூலம் போலீஸாரிடம் ஒப்படைக்கப்பட்டு,தமிழக முதல்வர் கருணாநிதியிடம் கேசட் ஒப்படைக்கப்பட்டது.
கேசட்டில் பேசியிருப்பது ராஜ்குமார்தானா என்பது
கேசட்டில் பேசியுள்ள ராஜ்குமார், நான் நலமாக இருக்கிறேன். வீரப்பன் என்னை சொந்த சகோதரன் போல் கவனித்துக் கொள்கிறார். யாரும்கலவரத்தில் ஈடுபட வேண்டாம். கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள். நீங்கள் கலவரத்தில் ஈடுபட்டால் அது எனக்குத்தான் ஆபத்தாக முடியும். எனவேஅனைவரும் அமைதி காக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
வீரப்பனின் மனதில் ஏதோ உள்ளது. அது என்ன என்பதை அறிந்து, அவரது கோரிக்கை என்ன என்பதை கேட்டு அதை எவ்வளவு விரைவில்நிறைவேற்ற முடியுமோ, அவ்வளவு வேகமாக நிறைவேற்ற வேண்டும் என்று கர்நாடக, தமிழக அரசுகளைக் கேட்டுக் கொள்கிறேன்.
கர்நாடகத்தில், தமிழர்கள், தெலுங்கர்கள் என பல தரப்பினரும் உள்ளனர். அவர்கள் அனைவரும் சகோதரர்கள் போல வாழ வேண்டும். எனவே,அவர்களுக்கு எந்தத் தொந்தரவையும் கன்னட மக்களும், எனது ரசிகர்களும் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கிறேன். நான் இங்குஎந்தத் தொந்தரவும் இன்றி நன்றாகவே இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
கேசட்டின் மறு பக்கத்தில் வீரப்பனும் பேசியுள்ளான். முதலில் அனுப்பிய கேசட்டில் கூறியிருந்ததையே அதிலும் கூறியுள்ளான். கேசட் முதலில் சத்தியமங்கலம்காட்டிலிருந்து, வீரப்பனின் கூட்டாளிகள் மூலம் கோபாலுக்குத் தரப்பட்டுள்ளது. அங்கிருந்து ஜெயம்கொண்டம் அனுப்பப்பட்டது. பிறகு பாண்டிச்சேரிக்கும்,அதன் பிறகு சென்னைக்கும் சென்றுள்ளது. வியாழக்கிழமை இரவுதான் கேசட் கருணாநிதியை அடைந்தது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications