லாலா அமர்நாத் மரணம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி:

Lalaசுதந்திர இந்தியாவின் முதல் கிரிக்கெட் அணியின் முதல் கேப்டன் என்ற பெருமையைப்பெற்ற லாலா அமர்நாத் டெல்லியில் சனிக்கிழமை அதிகாலை மரணமடைந்தார்.

லாலா அமர்நாத்திற்கு வயது 88. அவருக்கு மனைவி, மூன்று மகள்கள், முன்னாள்கிரிக்கெட் வீரர் மொஹிந்தர் அமர்நாத் உள்ளிட்ட மூன்று மகன்கள் உள்ளனர்.

லாலா அமர்நாத்தின் மகன் ராஜேந்தர் அமர்நாத் கூறுகையில், லாலா அமர்நாத் சிலமாதங்களாகவே உடல் நலம் சரியில்லாமல் படுத்த படுக்கையாக இருந்து வந்தார்.தினசரி அவருக்கு திரவ உணவே கொடுக்கப்பட்டு வந்தது.

பிப்ரவரி மாதம் அவர் வழுக்கி விழுந்ததில் இடுப்பு எலும்பு முறிந்தது. இதையடுத்துஅவரது உடல் நிலை மோசமாகவே இருந்து வந்தது.

அவரது இறுதிச் சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும். மொஹிந்தர் அமர்நாத்மற்றும் இன்னொரு மகன் சுரீந்தர் ஆகிய இருவரும் டெல்லியில் இல்லை. அவர்கள்வந்தவுடன்தான் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என்றார்.

பெருமைக்குரியவர்:

சுதந்திர இந்தியாவின் முதல் கேப்டனாக மட்டுமல்லாது பல்வேறு சாதனைகளையும்தனது பெயருக்குப் பின்னால் வைத்துள்ளார் லாலா அமர்நாத்.

இங்கிலாந்துக்கு எதிராக சதம் (118) எடுத்த முதல் இந்தியர் லாலா அமர்நாத். 1933-ம்ஆண்டு இங்கிலாந்து சென்றிருந்த இந்திய அணியில் இடம் பெற்றிருந்த லாலா இந்தச்சாதனையைப் புரிந்தார்.

சிறந்த ஆல் ரவுண்டரான லாலா, 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். இதில்15 போட்டிகளில் கேப்டனாக இருந்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் தேர்வுக் குழுத் தலைவராக பல ஆண்டுகள்பணியாற்றியுள்ளார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+