For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

வீரப்பன் நிபந்தனைகள்: பெங்களூரில் மீண்டும் பதற்றம்

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

தான் கடத்திச் சென்ற கன்னட நடிகர் ராஜ்குமாரை விடுவிக்க வேண்டுமானால், காவிரிப்பிரச்சனையைத் தீர்க்க வேண்டும் என்று சந்தன வீரப்பன் நிபந்தனை விதித்திருப்பதாகசெய்தி பரவியதையடுத்து பெங்களூரில் மீண்டும் ஆங்காங்கே வன்முறை மூண்டது.

வீரப்பன் அனுப்பிய கேஸட்டில், காவிரிப் பிரச்சனை தவிர, தன் தம்பியை சுட்டுக்கொன்ற முன்னாள் அதிரடிப்படையின் தலைவர் சங்கர் பித்ரியின் தலை வேண்டும், ரூ.50 கோடி பணம் வேண்டும், கர்நாடகத்தில் பள்ளி, கல்லூரிகளில் இரண்டாவதுபாடமொழியாக தமிழை வைக்க வேண்டும், தனக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும்.

தன் மீது கர்நாடகத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள அனைத்து வழக்குகளையும்தமிழகத்துக்கு மாற்ற வேண்டும் போன்ற நிபந்தனைகளை வீரப்பன் விதித்திருப்பதாகசனிக்கிழமை பிற்பகல் முதலே செய்திகள் பரவ ஆரம்பித்தன.

புரளிகளா, அல்லது உண்யாைன தகவல்களா என இவற்றை உறுதிப்படுத்தமுடியவில்லை. ஊறுதிப்படுத்தப்படாத இந்த தகவல்களை கர்நாடக அரசும்மறுக்கவில்லை. இதனால், வீரப்பன் அனுப்பிய கேஸட்டில் இந்த நிபந்தனைகள்இருந்தது உண்மை என்பது போன்ற தோற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து பெங்களூல் மெஜஸ்டிக், மார்க்கெட் பகுதிகளில் பல கும்பல்கள்கல்வீச்சில் ஈடுபட்டன. இதையடுத்து கடைகள் மூடப்பட்டன. அங்கு பெரும் பதற்றம்நிலவியது. பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நகரின் பல்வேறு பகுதிகளிலும் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.

இந் நிலையில் வீரப்பனின் நிபந்தனைகள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன்விவாதிக்க கர்நாடக முதல்வர் கிருஷ்ணா ஞாயிற்றுக்கிழமை சென்னை விரைகிறார்.

நக்கீரன் கோபால் மூலம் வீரப்பன் கொடுத்தனுப்பிய இந்த கேஸட்டில் என்ன விவரம்உள்ளது என்பதை தமிழக, கர்நாடக அரசுகள் அதிகாரப்பூர்வமாக வெளியிடமறுத்துவிட்டன. யூகங்கள் தான் பரவி வருகின்றன.

ராஜ்குமாரின் குடும்பத்தினரிடம் கூட கேஸட்டில் கூறப்பட்டுள்ள வீரப்பனின்நிபந்தனைகள் குறித்த விவரம் கூறப்படவில்லை.

நிபந்தனைகளை நிறைவேற்ற வீரப்பன் எந்த காலக்கெடுவும் வைக்கவில்லை எனகர்நாடக முதல்வர் கிருஷ்ணா கூறினார். கேஸட்டில் என்ன இருக்கிறது என்பதை கூறமறுத்த அவர், தமிழக முதல்வர் கருணாநிதியிடம் இது குறித்து இன்னும் பேசவில்லை.அவருடன் விவாதிப்பதற்கு முன் கேஸட்டில் என்ன இருக்கிறது என்பதை கூறவிரும்பவில்லை என்றார்.

நிபந்தனைகள் குறித்து பரவியுள்ள செய்திகள் குறித்தும் நான் ஏதும் கூறவிரும்பவில்லை. நிபந்தனைகள் நிபந்தனைகள் தான். அதல் முக்கியமானது எது,சாதாரணமானது எது என்றெல்லாம் கூற முடியாது. ராஜ்குமாரை மீட்க வேண்டும். இதுதான் இப்போதைய முக்கிய கவலையே என்றார்.

ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், கேஸட்டில் வீரப்பன் பொது மன்னிப்பும், பெரும்தொகையும் கேட்டிருப்பது உண்மை. மற்ற நிபந்தனைகள் குறித்து நான் இப்போதுஏதும் கூற முடியாது. இதில் இரு மாநிலங்களுக்கு தொடர்புள்ளது என்றார்.

வீரப்பனிடம் இருந்து வந்துள்ள இரண்டாவத கேஸட் இது. இதை தமிழக முதல்வர்கருணாநிதியிடம் தூதர ஒருவர் மூலம் வீரப்பன் அனுப்பி வைத்தான். இதை கருணாநிதிகர்நாடக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பி வைத்தார்.

முன்னதாக தான் நலமுடன் இருப்பதாக ராஜகுமார் பேசிய கேஸட் ஒன்றையும்வீரப்பன் அனுப்பி வைத்தான்.

ராஜ்குமார் கடத்தப்பட்டு சனிக்கிழமையோடு 6 நாட்கள் ஆகிவிட்டன என்பதுகுறிப்பிடத்தக்கது.

இந் நிலையில் இரு மாநிலங்கள் சார்பில் தூதரக அனுப்பப்பட்ட நக்கீரன் பத்திரிக்கைஆசிரியர் கோபால் இதுவரை வீரப்பனை நேரடியாக சந்திககவில்லை எனவும்தெரியவந்துள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X