பொது மன்னிப்பு கேட்கிறார் வீரப்பன்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

கன்னட நடிகர் ராஜ்குமாரை கடத்திச் சென்றுள்ள சந்தனக்கடத்தல் வீரப்பனை நக்கீரன்கோபால் சந்த்தித்துவிட்டு, அவனது பேச்சுக்கள் அடங்கியகேஸட்டை தமிழக அரசுக்குஅனுப்பியுள்ளார். இதில் தனக்குப் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்றுவீரப்பன் கோரியுள்ளார்.

இது தவிர மேலும் பல கோரிக்கைகளை வீரப்பன் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

பிரபல கன்னட திரைப்பட நடிகர் ராஜ்குமார் உட்பட நான்கு பேரை சந்தனக்கடத்தல்வீரப்பன் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு கடத்திச் சென்றான். அவனை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி அவனது கோரிக்கைகளை அறிந்து வருவதற்காக நக்கீரன் கோபால்காட்டுக்குள் சென்றுள்ளார்.

வீரப்பன் மறைந்துள்ள காட்டுப் பகுதியில் பலத்த மழை பெய்து வருவதல் வீரப்பனைகோபால் சந்திப்பதில் தடங்கல் ஏற்பட்டது. இந் நிலையில் சந்தனக்கடத்தல்வீரப்பனிடமிருந்து ஒரு தமிழ் வாரப்பத்திரிக்கைக்கு கேசட் வந்ததாக கூறப்பட்டது.

ஆனால் அதை போலீசாரோ, தமிழக அரசோ உறுதி செய்யவில்லை. இதற்கிடையேவீரப்பனை கோபால் சந்தித்து அவனிடம் பேசியதாகவும் வீரப்பனின் கோரிக்கைஅடங்கிய கேசட்டை தமிழகஅரசுக்கு அனுப்பியதாகவும் தகவல்கள் வந்துள்ளன.

அந்த கேசட்டில் தனக்கு பொது மன்னிப்பு வழங்கவேண்டும் என்று கர்நாடக மற்றும்தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளான். இது தவிர மேலும் பல கோரிக்கைகளைவீரப்பன் அந்த கேசட்டில் தெரிவித்துள்ளான்.

சனிக்கிழமை காலை ரகசியமாக வந்த இந்த கேசட்டை தலைமைைச் செயலகத்தில்முதல்வர் மற்றும் அரசு உயர் அதிகாரிகளும்,தமிழக டி.ஜி.பி. சர்மா ஆகியோர்கேட்டுஆலோசனை செய்தனர்.

கேசட்டில் உள்ள மற்ற முக்கிய கோரிக்கைள் எல்லாம் கர்நாடக அரசுக்குத்தொடர்புடையதாக இருப்பதால் அந்த கேசட்டை கர்நாடக அரசுக்கு அனுப்புவதுகுறித்து அவர்கள் பேசியதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

பொது மன்னிப்பு தவிர மற்ற கோரிக்கைகள் என்ன என்பது பற்றி தெரிவிக்க அந்தவட்டாரங்கள் மறுத்துவிட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+