வீரப்பன் விவகாரம் ... காங். தலைவர்களின் மழுப்பல்
கோவை:
வீரப்பனுக்கு பொதுமன்னிப்பு வழங்கலாமா? என்ற கேள்விக்கு காங்கிரஸ் தலைவர்களிடமிருந்து நேரடியான பதில் கிடைக்கவில்லை.
கோவையில் நடந்த காமராஜ் பிறந்த நாள் விழாவில் கலந்து கொள்ள வந்த காங்கிரஸ் கட்சித் தலைவர்களிடம் நிருபர்கள் வீரப்பனுக்கு பொது மன்னிப்புவழங்கலாமா எனக் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கேள்விக்கு, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ""நோ ஆன்ஸர் எனக் கூறி விட்டுச் சென்று விட்டார். விமான நிலையத்தில்இரண்டே கேள்விக்கு பதிலளித்த சோனியா காந்தி.
அடுத்த கேள்விக்கு, சுயாட்சி விஷயத்தில் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்குட்பட்டு, அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு காங்கிரஸ்ஆதரவளிக்கும் என்றார்.
அகில இந்திய காங்கிரஸ் செயலராக இருக்கும் அனில் சாஸ்திரியிடம் இந்தக் கேள்வியைக் கேட்டபோது, கர்நாடக முதல்வர் இந்த விஷயத்தில் திறந்தமனதுடன் செயல்படுவார் என நம்புகிறேன் என முடித்துக் கொண்டார்.
மொத்தத்தில், வீரப்பன் விவகாரத்தில் காங்கிரஸ் தலைவர்களின் கருத்து வெறும் மழுப்பலாகவே இருந்தது.












Click it and Unblock the Notifications