பிஜி புரட்சிக்காரர்கள் கீழ்த்தரமாக நடத்தினர் ...மகேந்திர செளத்ரி

Subscribe to Oneindia Tamil

லண்டன்:

பிஜி தலைநகர் சுவாவில் பாராளுமன்றத்தில் பிணைக்கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்த போது தான் மிகவும் கீழ்த்தரமாக நடத்தப்பட்டதாகமுன்னாள் பிரதமர் மகேந்திர பால் செளத்ரி தெரிவித்துள்ளார்.

மே 19 ம் தேதி தலைநகர் சுவாவில் புரட்சிக் கும்பல் தலைவர் ஜார்ஜ் ஸ்பீடு, பிரதமர் மகேந்திர செளத்ரி மற்றும் அவரது அமைச்சரவையில் உள்ளஎம்.பிக்களை பிணைக்கைதிகளாகப் பிடித்து பாராளுமன்றத்தில் சிறை வைத்தனர். பின்னர் ராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.

ராணுவத்திற்கும், புரட்சிக்கும்பலுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தைக்குப்பின் பிரதமர் செளத்ரி உள்பட பிணைக்கைதிகள் அனைவரும் 56 நாட்கள்சிறைவாசத்துக்குப் பிறகு விடுதலை செய்யப்பட்டனர். விடுவிக்கப்பட்ட முன்னாள் பிரதமர் செளத்ரி லண்டனிலிருந்து வெளியாகும் வார இதழான ஈஸ்டர்ன் ஐஎன்ற இதழுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிணைக்கைதியாக என்னை அடைத்து வைத்திருந்த போது ஜார்ஜ் ஸ்பீடு மற்றும் அவரது புரட்சிக் கும்பலால் மிகவும் துன்புறுத்தப்பட்டேன். என் உடம்பில்மூன்று இரும்பு வளையங்களால் அவர்கள் கட்டிப் போட்டிருந்தனர். என் உடம்பில் ரணம் தாங்காமல் ஆங்காங்கே ரத்தம் வழிந்தோடியது. என்மகனையும், என்னையும் கலவரக்காரர்கள் மிகவும் அடித்துத் துன்புறுத்தினார்கள்.

ராணுவத்தினர் புரட்சிக்காரர்களைத் தாக்கினால் அவர்கள் அதற்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக எங்களை அதிகமாகத் துன்புறுத்துவார்கள். இதைவெளியே நிற்கும் ராணுவத்தினரிடம் கூறுமாறு எங்களிடம் புரட்சிக்காரர்கள் கூறினர். புரட்சிக்காரர்களைத் தாக்கினாலோ, அல்லது பாராளுமன்றவளாகத்திற்குள் நுழைய முற்பட்டாலோ புரட்சிக்காரர்கள் சுட்டுக் கொலை செய்து விடுவார்கள் என்று கூறுமாறு புரட்சிக்காரர்கள் எங்களிடம்கூறினர்.

எனக்குக் கிடைத்த கீழ்த்தரமான அனுபவத்தை மறக்கவே முடியாது. அதிலிருந்து மீளுவதற்கு இன்னும் பல நாட்கள் பிடிக்கும். புரட்சிக்காரர்கள்ஒவ்வொருவராய் அரசு இப்போது கைது செய்து கொண்டிருந்தாலும் நாட்டில் சட்டம்-ஒழுங்கு நிலை சீர்குலைந்து விட்டது. பிஜி தீவில் மீண்டும் இயல்புதிரும்பவது கடினமே.

பிஜியில் வாழும் இந்திய வம்சாவளியினர் மீது தாக்குதல்கள் அதிகரித்து வருகிறது. இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண்களை அங்குள்ள புரட்சிக்காரர்கள்ஈவு, இரக்கமின்றி கற்பழிக்கிறார்கள். ராணுவத்தினரும், காவல்துறையினரும் சட்டம்-ஒழுங்கு நிலையைக் காக்கத் தவறி விட்டனர் என்று தனதுபேட்டியில் கூறியுள்ளார் மகேந்திர செளத்ரி.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+