அசாமில் கன மழைக்கு 26 பேர் சாவு
கவுஹாத்தி:
அசாமில் பெய்து வரும் கடும் மழைக்கு 26 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். லட்சக்கணக்கான பேர் வீடு இழந்துதவிக்கின்றனர்.
அரசு செய்தித்தொடர்பாளர் மனோஜ் தேப் இதுகுறித்துக் கூறுகையில், அசாமில் ஒரு வாரத்திற்கும் மேலாகதொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. கடந்த மூன்று நாட்களில் பெய்த மழையினால், ரயில்தண்டவாளங்களிலும், சாலைகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பிரம்மபுத்திரா ஆற்றிலும், பல சிறியஆறுகளிலும் வெள்ளம் நிரம்பி வழிகின்றனது.
தகவல் தொடர்பு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அடை மழைக்கு இதுவரை 26 பேர் பலியாகியுள்ளனர் என்றுதெரிய வந்துள்ளது. ஆற்றங்கரையோரம் உள்ள பல பாலங்கள் இடிந்து விழுந்துள்ளன. ஆங்காங்கே தொலைபேசிவயர்கள் அறுந்து விழுந்துள்ளன. மின்சாரமும் தடைபட்டுள்ளது. அரசு அலுவலகங்கள், காவல்நிலையங்கள்,பள்ளிக்கூடங்களில் மழை நீர் தேங்கிக் கிடக்கிறது.
இதுவரை 40 க்கும் மேற்பட்ட நிவாரண முகாம்களை அரசு அமைத்துள்ளது. நெடுஞ்சாலைப் பகுதியில்ஆயிரக்கணக்கானோருக்கு தற்காலிகமாக வீடுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளன. கடும் மழை நீடிக்கும்அபாயம் உள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications