வழிப்பறி செய்த 4 போலீஸாருக்கு 5 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

ஆம்னி பஸ்ஸை வழிமறித்து அதில் பயணம் செய்த வியாபாரியிடம் கத்தியைக் காட்டிமிரட்டி ரூ. 4 லட்சத்தைப் பறித்த ஆயுதப் படை போலீஸ்காரர்கள் 4 பேருக்குத் தலா 5ஆண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

சென்னையிலிருந்து மதுரைக்குச் சென்ற ஆம்னி பஸ்ஸில் கம்பத்தைச் சேர்ந்த மிளகுவியாபாரி ஜேம்ஸ் பயணம் செய்தார், செங்கல்பட்டு அருகே அச்சரப்பாக்கம் என்றஇடம் அருகே பஸ் வந்து கொண்டிருந்தபோது ஆயுதப் படைப் போலீஸார் பஸ்சைவழிமறித்தனர். உடன் அவர்களுடைய நண்பர்கள் இருவர் இருந்தனர்.

பஸ்ஸில் ஒருவர் கருப்புப் பணம் வைத்துள்ளார். சோதனை செய்ய வந்திருக்கிறோம்என்று டிரைவரிடம் போலீஸார் கூறினர். ஜேம்ஸிடம் வந்த அவர்கள், உங்களிடம்கருப்புப் பணம் இருப்பதாக எங்களுக்கு தகவல் கிடைத்துள்ளது.

மரியாதையாக உங்களிடமுள்ள பணத்தைக் கொடுத்துவிடுங்கள் என்று மிரட்டிஅவரிடமிருந்த ரூ. 4 லட்சத்தைப் பறித்துக் கொண்டு, தாங்கள் வந்த போலீஸ் ஜீப்பில்தப்பிச் சென்றுவிட்டனர்.

இது குறித்து அச்சரப்பாக்கம் போலீஸில் ஜேம்ஸ் புகார் கொடுத்தார். உடனேவயர்லெஸ் மூலம் அருகில் உள்ள போலீஸ் நிலையங்களுக்குத் தகவல் தரப்பட்டது.அதன்படி போலீஸார் துரிதமாகச் செயல்பட்டதில் சென்னை துரைப்பாக்கம் அருகேவந்து கொண்டிருந்த அந்த ஜீப் மடக்கப்பட்டது.

அதில் இருந்த ஆயுதப் படைப் போலீஸார் 4 பேரும் அவர்களது நண்பர்கள் இருவரும்கைது செய்யப்பட்டனர். செல்லபாண்டியன், மோகன், பாண்டி, ஜீவன்ராஜா ஆகியபோலீஸார் மீதும் பரமசிவம், கோபி ஆகிய அவர்களது நண்பர்கள் மீதும் மதுராரந்தகம்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் நந்தன், வழிப்பறியில் ஈடுபட்டபோலீஸ்காரர்கள் 4 பேருக்கும் தலா 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்துத்தீர்ப்பளித்தார். அவர்களது நண்பர் பரமசிவம் விடுதலை செய்யப்பட்டார். கோபிக்குரூ.500 அபராதம் விதிக்கப்பட்டது.

சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட போலீஸார் 4 பேரும் கடலூர் சிறையில் கம்பிஎண்ணிக் கொண்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+