காஷ்மீர் போர் நிறுத்தத்திற்கு முஷாரப் காரணம்?
டெல்லி:
காஷ்மீரில் ஹிஸ்புல் முஜாஹிதீன் தீவிரவாதிகள் அறிவித்த போர் நிறுத்த முடிவுக்குப்பின்னணியில் அமெரிக்காவும், பாகிஸ்தானும் இருக்கலாம் என்று காஷ்மீர் விவகாரம்குறித்த நிபுணர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
திடீரென சில நாட்களுக்கு முன்பு, ஹிஸ்புல் இயக்கத்தினர் மூன்று மாத போர் நிறுத்தம்அறிவித்தனர். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து மத்தியஅரசும் பேச்சுவார்த்தைக்குச் சம்மதித்தது. தற்போது முதல் கட்ட பேச்சுவார்த்தைதுவங்கியுள்ளது.
இந்த நிலையில், ஹிஸ்புல் முடிவுக்கு பாகிஸ்தான் ராணுவ ஆட்சியாளர் முஷாரப்காரணமாக இருக்கலாம் என்ற கருத்தை காஷ்மீர் விவகாரத்தைத் தொடர்ந்து கவனித்துவருபவர்கள் கூறியுள்ளனர்.
பிரபல பத்திரிகையாளர் குல்தீப் நய்யார் கூறுகையில், முஷாரப்தான் இதறகுக்காரணமாக இருக்க முடியும். கடந்த ஜுலை மாதம் நான் முஷாரப்பைச் சந்தித்தபோது,காஷ்மீரில் ஆறு மாதங்களுக்கு போர் நிறுத்தம் அறிவிக்க நாங்கள் விரும்புகிறோம்.இதை உங்களது பிரதமரிடம் கூறுங்கள் என்றார்.
இதை நானும் பிரதமர் வாஜ்பாயிடம் கூறினேன். ஆனால் அவரிடமிருந்து உடனடியாகபதில் ஏதும் இல்லை. பார்க்கலாம் என்றரீதியில் அவர் பதிலளித்தார். பின்னர் ஜூலை24-ம் தேதி நாடாளுமன்றம் கூடியபோதும் பிரதமரிடம் ஞாபகப்படுத்தினேன.அப்போதும் அவர் மெளனத்தையே பதிலாகத் தந்தார். ஒருவேளை, அரசுத் தரப்பில்ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.
பாகிஸ்தானின் கொள்கையை முழுவதுமாக நாம் நம்பி விட முடியாது. எப்போதும்நல்ல பிள்ளை போல நடந்து கொள்ளவே அவர்கள் விரும்புவார்கள்.இப்பிராந்தியத்தில் போரில் ஈடுபடுவதில் தங்களுக்கு விருப்பமில்லை என்றுஅமெரிக்காவுக்கு எடுத்துக் காட்டுவதையே அவர்கள் விரும்புவார்கள் என்றார்.
தேசிய மாநாட்டுக் கட்சி எம்.பி.அப்துல் ரஷீத் ஷாஹீன் கூறுகையில், மத்தியஅரசுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே நடக்கும் பேச்சுவார்த்தை திடீரெனஏற்பட்டதல்ல. சில காலமாகவே போர் நிறுத்தம் குறித்து அவர்கள் பேசி வந்தனர்.
இது ஒரு நல்ல ஆரம்பம். இது நல்லபடியாக முடிய வேண்டும் என்பதே எனதுவிருப்பம் என்றார் அவர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications