For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

"கேசட் கொடுத்ததற்காக வீரப்பனுக்கு நன்றி

By Staff
Google Oneindia Tamil News

பெங்களூர்:

நடிகர் ராஜ்குமார் பேச்சு அடங்கிய கேசட்டை அனுப்பியதற்காக சந்தனக் கடத்தல் வீரப்பனுக்கு, கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா நன்றிதெரிவித்துள்ளார்.

கிருஷ்ணா, வெள்ளிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ராஜ்குமார் பேசிய ஆடியோ கேசட் தமிழக முதல்வர் அலுவலகம் மூலம் கிடைத்துள்ளது. வீரப்பனால் கடத்தப்பட்ட தினத்தில் இருந்தே ராஜ்குமாருக்குஎந்தத் தீங்கும் ஏற்படாது என்று எங்களுக்குத் தெரியும். அவருக்கு எதிரிகளே கிடையாது. இதை அவரின் கேசட் பேச்சு நிருபித்துள்ளது.

கேசட்டில் பேசிய ராஜ்குமார் மிகவும் மன தைரியத்துடன் பேசியுள்ளார். அவரது கேசட் பேச்சைக் கேட்டு கர்நாடக மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.தற்போது வீரப்பன் வைக்கும் கோரிக்கை என்னவாக இருக்கும் என்பதைத் தெரிந்து கொள்வதற்காக அரசு காத்திருக்கிறது.

கோரிக்கைகளை தமிழகத்தில் இருக்கும் கர்நாடக பிரதிநிதி தெரிவிப்பார். வீரப்பன் கோரிக்கை என்னவாக இருந்தாலும் அதைப் பரிசீலிக்க அரசுதயாராக இருக்கிறது. ஒருவரை வெறுப்பதன் மூலமாகவோ, ஒருவரை திட்டுவதன் மூலமாக எதையும் சாதித்து விட முடியாது. மக்கள் பந்த்மார்க்கத்தை விட்டு பக்தி மார்க்கத்திற்குச் சென்றிருப்பது சந்தோஷமளிக்கிறது. இது வரவேற்கத்தக்க மாறுதல்.

கேசட் அனுப்பியிருப்பதன் மூலம் வீரப்பன் எல்லாருக்கும் மனநிம்மதியைத் தந்திருக்கிறார். இதனால் கர்நாடக அரசு வீரப்பனுக்கு நன்றி தெரிவிக்கிறது.வீரப்பனது கோரிக்கைகள் குறித்து தெரிந்த பின்னரே அவருக்குப் பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து முடிவு செய்யப்படும்.

வீரப்பன் கடத்தப்பட்ட நடிகர் ராஜ்குமாரின் மனைவி பர்வதம்மாவிடம் கொடுத்தனுப்பிய கேசட்டில் கோரிக்கைகள் எதுவும் இல்லை. தூதுவரைஅனுப்புமாறு மட்டுமே கேட்டுக் கொண்டுள்ளார்.

கேசட்டில் பேசி இருப்பது ராஜ்குமார்தான் என்பதை அவரது மனைவியும், மக்களும், ஆயிரக்கணக்கான கன்னட மக்களும் உறுதி செய்துள்ளனர்.நானும், பல தடவை கேசட் பேச்சைக் கேட்டேன். அவருடன் பல பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேசியிருப்பதால் அவரது குரல் எனக்கு நன்றாகத்தெரியும். எனவே கேசட்டில் இருக்கும் ராஜ்குமாரின் குரலைச் சந்தேகிக்கத் தேவையில்லை.

வீரப்பனுக்கு எதிரான எல்லா நடவடிக்கைகளையும் தமிழக, கர்நாடக அரசுகள் நிறுத்தி விட்டன. ஒருவன் எப்போதும் தவறு செய்பவனாக இருக்கவேண்டிய அவசியம் இல்லை. எல்லோரையும் திருத்த முடியும் என்ற ஜெயபிரகாஷ் நாராயணனின் கருத்தில் நம்பிக்கை கொண்டவன் நான்.

கடத்திச் செல்லப்பட்டவர்கள் நான்கு பேரும் நலமாக இருக்க வேண்டும் என்பதுதான் அரசின் இப்போதைய குறிக்கோள். ராஜ்குமாரின்வேண்டுகோளுக்கு இணங்க கர்நாடக மக்கள் மாநிலத்தில் அமைதி, நல்லுறவை பாதுகாக்க வேண்டும். தேவைப்பட்டால் சென்னை சென்று முதல்வர்கருணாநிதியை சந்திப்பேன் என்றார் முதல்வர் கிருஷ்ணா.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X