பணம் எண்ண ஆசைப்பட்டவர் கம்பி எண்ணுகிறார் ...

Subscribe to Oneindia Tamil

சென்னை:

லாட்டரிச் சீட்டின் நம்பரைத் திருத்தி தனக்கு ரூ. 9 லட்சம் பரிசு விழுந்ததாக ஏமாற்றிபணம் பெற முயன்றவர் கைது செய்யப்பட்டார்.

இது பற்றி கூறப்படுவதாவது:

தமிழக அரசின் பாரிவள்ளல் பரிசுச் சீட்டுக் குலுக்கல் கடந்த ஆண்டு மார்ச்சில்நடைபெற்றது. ஓ 265323 என்ற எண்ணுக்கு முதல் பரிசாக ரூ. 9 லட்சம் விழுந்தது.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரைச் சேர்ந்த சிவகுமார் என்பவர் தன்னிடமுள்ளபரிசுச் சீட்டுக்கு ரூ. 9 லட்சம் பரிசு விழுந்துள்ளதாக மண்ணடியில் உள்ள இந்தியன்வங்கியில் அந்த பரிசுச் சீட்டை டெபாசிட் செய்தார்.

வங்கி அதிகாரிகள் அந்த பரிசுச் சீட்டை தமிழ்நாடு பரிசுச் சீட்டுத் துறைஅதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். அந்த சீட்டை பரிசோதித்துப் பார்த்தபோது அதுபோலியானது என்றும், அதில் இருந்த நம்பர் திருத்தப்பட்டிருந்ததும் தெரியவந்தது.

இதையடுத்து இது குறித்து சிவகுமார் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸில்புகார் கொடுத்தனர். இப்புகாரின் பேரில் சிவகுமாரைப் போலீஸார் கைது செய்துவிசாரித்ததில், பரிசுச் சீட்டு நெம்பரை திருத்தியதை அவர் ஒப்புக் கொண்டார்.

லாட்டரி சீட்டில் மோசடி செய்து பணம் வாங்கி அதை எண்ணும் ஆசையில் இருந்தசிவகுமார், இப்போது சிறையில் கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+