12 புதிய மாடல்களில் "நம்ம ஊரு வண்டி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கிராமப்புற மக்களை கவரும் வண்ணம், புதிய இரண்டு சக்கர வாகனங்களை டி.வி.எஸ்.சுசூகி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. 12-க்கும் மேற்பட்ட வாகனங்கள் இதன்மூலம் அறிமுகப்படுத்தப்படுகிறது.

கோவையில் டி.வி.எஸ் சுசூகி நிறுவனத்தின் வர்த்தக திட்டப் பிரிவின் தலைவர்சந்திரமவுலி நிருபர்களிடம் கூறியதாவது:

டி.வி.எஸ் சுசூகி நிறுவனம் பல்வேறு மாடல்களில் புதிய வாகனங்களைஅறிமுகப்படுத்தி வருகிறது. ஸ்கூட்டர், மொபட், மற்றும் பைக் ஆகிய வாகனங்களில்12 வகையான மாடல்கள் அறிகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிறுவனம், இந்திய இரண்டு சக்கர வாகனங்களின் சந்தையில் 14 சதவீதம் இடம்பிடித்துள்ளது. தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, ஆந்திரா போன்ற தென் மாநிலங்களில்இந்நிறுவனம் 80 சதவீத விற்பனையைக் கொண்டுள்ளது.

மேற்கு வங்காளம், பஞ்சாப், உத்தரப் பிரதேசம், போன்ற மாநிலங்களில் டி.வி.எஸ்,சுசூகி நிறுவனம் ஸ்கூட்டர் விற்பனையை அதிகரித்துள்ளது. தற்போது, இரண்டு சக்கரவாகனங்கள் விற்பனையில் 23 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது.

கடந்த நான்கு மாதங்களில் இந்நிறுவனம் 1.18 லட்சம் மோட்டார் பைக், 1.28 லட்சம்மொபட்டுகளை உற்பத்தி செய்துள்ளது. வருங்காலத்தில் மிகப் பெருமளவிலானவிற்பனையைப் பெருக்க இந்த நிறுவனம் திட்டமிட்டு வருகிறது. ஆனால், கார்உற்பத்தியில் இறங்கும் திட்டம் எதுவும் இல்லை என்றார் அவர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+