தியாகிக்கு ஜெ. ரூ. 1 லட்சம் உதவி
சென்னை:
விடுதலைப் போராட்டத் தியாகி பொன்னுசாமி நாயக்கருக்கு ரூ. 1 லட்சம் உதவித்தொகை வழங்கப்படும்என்று அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாகூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:
சேலம் மாவட்டம் தாதம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் பொன்னுசாமி நாயக்கர்.பிரிட்டிஷார் ராணுவத்தில் பணியாற்றி வந்த இவர், விடுதலை வேட்கை காரணமாகதாமாகவே முன் வந்து ராணுவத்திலிருந்து ஓய்வு பெற்றார்.
தனக்குக் கிடைத்த பணத்தை மகாத்மா காந்தியை நேரில் சந்தித்து அவரிடம் கொடுத்துதன்னை விடுதலைப் போராட்டத்தில் ஈடுபடுத்திக் கொண்டார்.
விடுதலைப் போராட்டத்தின்போது ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்று பல முறைசிறை சென்றவர் பொன்னுசாமி நாயக்கர். திடீரென்று அவரது குடிசை வீட்டில் ஏற்பட்டதீவிபத்தில் அவர் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டதற்கான ஆவணங்கள் எல்லாம்எரிந்து சாம்பாலாகி விட்டதாகத் தெரிகிறது.
தற்போது தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே மாம்பட்டி கிராமத்தில் தனதுகுடும்பத்தாருடன் பொன்னுசாமி நாயக்கர் வறுமையில் வாடுகிறார். தியாகிகள் உதவித்தொகை கோரி பல முறை விண்ணப்பித்தும் அவருக்கு மத்திய அரசிடமிருந்தோ,மாநில அரசிடமிருந்தோ எந்த உதவியும் கிடைக்கவில்லை.
நாட்டின் விடுதலைக்காகப் பாடுபட்ட தியாகி பொன்னுசாமி நாயக்கரின் வறுமைநிலையைக் கருத்தில் கொண்டு அவருக்கு அ.தி.மு.க.சார்பில் ரூ. 1 லட்சம்வழங்கப்படுகிறது என்றார் ஜெயலலிதா.












Click it and Unblock the Notifications