வீரப்பன் கேசட் ... ரகசியம் காக்கும் கர்நாடகம்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

வீரப்பன் கொடுத்தனுப்பிய கேசட்டில் உள்ள தகவல்கள் குறித்து கர்நாடக அரசு மிகவும் ரகசியம் காக்கிறது.

சந்தனக் கடத்தல் வீரப்பனிடமிருந்து சனிக்கிழமை தமிழக முதல்வர் கருணாநிதிக்கு இரண்டு கேசட்டுகள் வந்தன. அதில் ஒன்று கர்நாடக முதல்வருக்குஅனுப்பப்பட்டது. இந்தக் கேசட்டில் நிபந்தனைகளை வீரப்பன் விதித்திருக்கலாம் என்று தெரிகிறது.

வீரப்பன் கேசட் குறித்தத் தகவல்களை மிகவும் ரகசியமாக கர்நாடக அரசு வைத்துள்ளது. நடிகர் ராஜ்குமாரின் மகன் ராகவேந்திரா ராஜ்குமார்கூறுகையில், கேசட்டில் உள்ள விவரங்கள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியுடன் பேசிய பிறகே அவை குறித்து வெளியிடுவேன் என்று முதல்வர் கிருஷ்ணாகூறியுள்ளார். கேசட்டில் ராஜ்குமாரின் பேச்சு இல்லை என்றார்.

அனைத்துக் கட்சிகூட்டம்

இதற்கிடையே, வீரப்பன் அனுப்பியுள்ள கேசட் குறித்து விவாதிக்க கர்நாடக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்டியுள்ளது. இத்தகவலை முதல்வர்எஸ்.எம்.கிருஷ்ணா தெரிவித்துள்ளார்.

வீரப்பன் கர்நாடக அரசுக்கு அனுப்பிய கேசட்டை, சென்னையில் முகாமிட்டுள்ள கர்நாடக ஐ.ஜி. ஸ்ரீனிவாஸ், பெங்களூருக்குக் கொண்டு வந்தார். கேசட்டைசீனிவாசன், கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவிடம் கொடுத்தார்.

கேசட்டை முதல்வர் கிருஷ்ணா கேட்டார். பின்னர் அக்கேசட் நடிகர் ராஜ்குமாரின் குடும்பத்தாருக்கும் போட்டுக் காட்டப்பட்டது. கேசட்டில் பதிவுசெய்யப்பட்ட வீரப்பனின் பேச்சைக் கேட்டபின் முதல்வர் கிருஷ்ணா நிருபர்களிடம் கூறியதாவது:

வீரப்பனின் கோரிக்கைகள் அடங்கிய கேசட் கோபால் மூலம் கர்நாடாக அரசுக்குக் கிடைத்துள்ளது. வீரப்பனின் கோரிக்கைள் தமிழிலேயே உள்ளது.இது குறித்து மூத்த எம்.பி.க்களுடன் விவாதிக்கத் திட்டமிட்டுள்ளேன்.

நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்களையும் விரைவில் வீரப்பன் விடுவிக்கத் தேவையான அனைத்து முயற்சியையும் இரு மாநில அரசுகளும்மேற்கொள்ளும்.

ராஜ்குமார் மனைவி பர்வதம்மாவிடம் கொடுத்தனுப்பியிருந்த கேசட்டில் இருந்ததைப் போன்ற தொனியிலேயே இந்தக் கேசட்டிலும் வீரப்பன்பேசியுள்ளான்.

கோபால் இன்னும் காட்டிலேயே இருக்கிறார் என்றார் முதல்வர் கிருஷ்ணா.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+