கோவை வருகிறார் சோனியா காந்தி

Subscribe to Oneindia Tamil

கோவை:

கோவையில் நடைபெறவுள்ள காங்கிரஸ் பொதுக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காககாங்கிரஸ் தலைவர் சேனியா காந்தி சனிக்கிழமை கோவை வருகிறார்.

வ.உ.சி மைதானத்தில் நடக்கும் இந்தக் கூட்டம், தமிழகத்தில் காங்கிரஸ் கட்சியின்பலத்தை நிரூபிக்கக் கூடியதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சோனியா காந்தி கோவை வருவதையொட்டி, நகர் முழுவதும் பலத்த பாதுகாப்புஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார்குவிக்கப்பட்டுள்ளனர். வ.உ.சி மைதானத்தில் போலீசார் தீவிரக் கண்காணிப்பில்ஈடுபட்டு வருகின்றனர்.

பொதுமக்களை மிகவும் உன்னிப்பாக கவனிக்கும் விதத்தில், காமிராக்கள்நிறுவப்பட்டு டி.வி யுடன் இணைக்கப்பட்டுள்ளன. மேலும், மோப்ப நாய் மூலம்மேடை முழுவதும் தீவிர சோதனை செய்யப்பட்டு தயார் செய்யப்பட்டு வருகிறது.

காங்கிரஸ் கட்சியின் பலம் அதிகம் இருப்பதாக கருதப்படும் நீலகிரி மாவட்டத்தில்இருந்து தொண்டர்கள் அதிக அளவில் கலந்து கொள்கின்றனர். தமிழகம் முவதிலும்இருந்து ஒரு லட்சம் தொண்டர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை நகர் முழுவதும் அதிக அளவில் விளம்பரங்கள் மேற்கொள்ளப்பட்டு, கொடி,போஸ்டர்கள் இருந்தாலும், கட்சித் தொண்டர்களின் வருகை இதுவரை குறைவாகவேஉள்ளது.

காங்கிரஸ் கட்சிக்கு இந்த மாநாடு திருப்பு முனையாக இருக்குமா என்பது சனிக்கிழமைமாலை நிரூபணமாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+