For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

காமராஜர் காலம் தமிழகத்தின் பொற்காலம் ... சோனியா

By Staff
Google Oneindia Tamil News

கோவை:

தமிழகத்தில் காமராஜர் ஆட்சிக்காலம் தான் பொற்காலமாக விளங்கியது என்றுகூறினார் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி.

கோவையில் தமிழக காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜர் பிறந்த நாள் விழாநடந்தது. தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் இளங்கோவன் வரவேற்றார்.

முன்னாள் எம்.பி., பிரபு தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் பொதுச்செயலர் அனில் சாஸ்திரி கலந்து கொண்டார். இக் கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ்தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:

காஷ்மீரில் அமைதி திரும்ப மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்காங்கிரஸ் கட்சி ஆதரவு அளிக்கும்.

மீண்டும் தமிழகம் வருவதில் நான் பெரும் மகிழ்ச்சியடைகிறேன். தமிழக மக்கள் எனதுகுடும்பத்தின் மீது கொண்டுள்ள அன்பிற்காக நான் கடமைப் பட்டுள்ளேன்.

கோவையில் நடக்கும் இந்த காமராஜர் பிறந்த தின விழா நான் இங்கு கலந்துகொள்ளும்முதல் நிகழ்ச்சியாகும். அவர் முதல்வராக இருந்த காலம், காங்கிரஸ்கட்சிக்கு பொற்காலமாகும்.

முக்கிய முதல்வராகவும், ஏழை எளிய மக்களின் நலன் காக்கும் முதல்வராகவும்,எளிமையானவராகவும், கல்வி, வேலை வாய்ப்பை உருவாக்கியவராகவும் காமராஜர்திகழ்ந்தார் என்பதில் ஐயமில்லை.

மத்திய அரசு மேற்கொண்டுள்ள பல்வேறு திட்டங்கள் பொருளாதாராத்தை வீணாக்கிவருகின்றன. உலக வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதன் மூலம் நாட்டில்பல்வேறு தொழில்கள் நசிவடையும் நிலையில் உள்ளன.

கோவையில் உள்ள ஜவுளித் தொழில்கள், திருப்பூரில் ஏற்றுமதியாகும் பனியன்தொழில்கள் உட்பட பல்வேறு தொழில்கள் நசிவடைந்துள்ளன. தேயிலைஇறக்குமதியால் நீலகிரி விவசாயிகள் பாதிப்படைந்துள்ளனர்.

தமிழகத்தில் விவசாயிகளை அரசு ஏமாற்றி வருகிறது. கரும்புக்கு கட்டுபடியான விலைஅளிப்பதாகக் கூறி, மோசடியில் ஈடுபட்டுள்ளது.

10 சதவீத சர்க்கரைச் சத்துள்ள கரும்பிற்கு டன் ஒன்றிற்கு ஆயிரம் ரூபாய் எனஅறிவித்தது. ஆனால், தமிழகத்தில் விளையும் கரும்பு எதற்கும் 10 சதவீத சர்க்கரைச்சத்து கிடைக்காது. இவற்றில் 8.5 சதவீத சர்க்கரைச் சத்து மட்டுமே இருக்கும். அரசியல்நடத்துவதற்காக மட்டுமே இத்தகைய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

காவிரிப் பிரச்னையைப் பொருத்தவரையிலும் சரி, மாநிலங்களுக்கு இடையேயானஎந்த பிரச்னையையும் சுமுகமாகத் தீர்க்க, காங்கிரஸ் ஆட்சி தயாராகவே உள்ளது.காவிரிப் பிரச்னையை சுமுகமாகப் பேசித் தீர்ப்பதன் மூலம் மாநிலங்களிடையேநல்லுறவு ஏற்படும் என்பதில் காங்கிரஸ் வலுவான நிலையில் உள்ளது.

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சிறுபான்மையினர் மீது தாக்குதல் நடக்கின்றன. பலஇடங்களில் வழிபாட்டுத் தலங்கள் தாக்கப்படுகின்றன. இவை அனைத்தும் பாரதியஜனதாக் கட்சியின் தூண்டுதலால் நடக்கிறது. சிறுபான்மையினருக்கு காங்கிரஸ்ஆட்சியில் தான் முழு பாதுகாப்பு இருந்தது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் இப்போதும் கூட பயங்கரவாதம் இருந்து வருகிறது.இதனை ஒடுக்க கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு அமைதி திரும்பஅரசியல் சட்டத்திற்குட்பட்டு அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும்காங்கிரஸ் ஆதரவு அளிக்கும்.

சமீபத்தில் அமர்நாத் யாத்திரை சென்ற பக்தர்கள் கொடூரமான முறையில்கொல்லப்பட்டனர். அவர்களது உடைமைகளை இழந்து தவித்தனர். இந்த பிரச்னைகுறித்து நீதி விசாரணை மேற்கொள்ள வேண்டும்.

இலங்கைப் பிரச்னையைப் பொறுத்தவரை 1987 ம் ஆண்டு இரு அரசுகளும்மேற்கொண்ட ஒப்பந்தம் தான் தீர்வாக அமையும். இலங்கைப் பிரச்னைக்குஎப்போதும் இதுவே தீர்வாக அமையும். இதனை இலங்கை அரசு உணர்ந்து வருகிறது.

சமீபத்தில், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஒரு கட்சி நடத்திய மாநாட்டில் உள்துறைஅமைச்சர் கலந்து கொண்டு பேசுகிறார். இதனால் உள்துறை அமைச்சரேபயங்கரவாதத்திற்கு ஆதரவாக நடந்து கொள்கிறார் என்று தான் கருத முடியும்.இதனை எதிர்த்து தமிழக காங்கிரஸ் போராட்டம் நடத்தியது பாராட்டத் தக்கது.

கடந்த 1996ம் ஆண்டில் தமிழக காங்கிரஸ் உடைந்தாலும், உண்மையான காங்கிரஸ்இப்போது வலுவான சக்தியாக மாறி நிற்கிறது. இங்கு கூடியுள்ள மக்கள் இதனைநீரூபித்துள்ளனர் என்பதில் ஐயமில்லை.

வரும் தேர்தலில், மிகவும் பலம் வாய்ந்த சக்தியாக காங்கிரஸ் இருக்கும். தமிழகத்தில்காங்கிரஸ் கட்சியை வளரச் செய்ய அனைத்து நடவடிக்கைகளுக்கும் காங்கிரஸ்மேலிடம் ஆதரவளிக்கும் என்று சோனியா கூறினார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X