தமிழகத்தில் யாருக்கும் மெஜாரிட்டி கிடைக்காது ... அனில் சாஸ்திரி

Subscribe to Oneindia Tamil

கோவை:

தமிழகத்தில் வரும் சட்டசபைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காது என கோவையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலர்அனில் சாஸ்திரி கூறினார்.

கோவை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அனில் சாஸ்திரி கூறியதாவது:

தமிழ் மாநில காங்கிரஸ் மட்டுமல்ல, எந்த மதச்சார்பற்ற கட்சியும் எங்களுடன் இணைந்தால், அதனை நாங்கள் வரவேற்போம். தமிழ் மாநிலகாங்கிரஸ், காங்கிரஸ் கட்சியுடன் இணைவது குறித்து மூப்பனார் தான் முடிவு செய்ய வேண்டும்.

தமிழகத்தில் முதல்வர் கருணாநிதி வெளியிடும் கருத்துக்கள்முன்னுக்கு பின் முரணானவையாகவே இருந்து வருகிறது. பாட்டாளி மக்கள் கட்சியுடன்நேரடியாகவோ, மறைமுகமாகவோ உறவு வைத்துக் கொள்ள காஙகிரஸ் விரும்பவில்லை.

தமிழகத்திற்கு கடந்த முறை கர்நாடகத்திலிருந்து காவிரியில் 6 டி.எம்.சி தண்ணீர் வழங்கப்பட்டுள்ளது. இது போதாது என முதல்வர் கருணாநிதி கோரியுள்ளார்.தமிழகத்திற்கு எவ்வளவு கொடுத்தாலும் போதாதுதான்.

மேற்கு வங்காளத்தில் மம்தா பானர்ஜி, பாரதிய ஜனதா உதவியுடன் ஆட்சியைப் பிடிக்க முடியாது. அந்த மாநிலத்தில் கூட்டணி குறித்து எதுவும் நாங்கள்முடிவு செய்யவில்லை. இதுவரை கூட்டணி அமைப்பதாக முடிவு செய்யவில்லை.

வீரப்பனுக்கு பொது மன்னிப்பு கொடுப்பது பற்றி முதல்வர் கிருஷ்ணா தான் முடிவு செய்ய வேண்டும். அவர் திறந்த மனதுடன் செயல்படுவார் எனநம்புகிறேன். முதல்வர் கிருஷ்ணா சார்பாக நான் எதுவும் கூறமுடியாது என்றார் அனில்சாஸ்திரி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+