கோபாலுக்கு விருது கிடைக்குமா?
சென்னை:
வீரப்பனிடம் தூதராக சென்றுள்ள நக்கீரன் கோபாலுக்கு மத்திய அரசு விருது பெற்றுத் தருவது குறித்து யோசிக்கப்படும் என்று முதல்வர் கருணாநிதிகூறியுள்ளார்.
வீரப்பன் நிபந்தனைள் குறித்து தமிழக முதல்வர் கருணாநிதியும், கர்நாடக முதல்வர் கிருஷ்ணாவும் சென்னையில், ஞாயிற்றுக்கிழமை கூட்டாகப்பேட்டியளித்தனர். அப்போது கருணாநிதி கூறுகையில், நக்கீரன் கோபால் இரு அரசுகளின் தூதராக வீரப்பனிடம் சென்றுள்ளார். அவருக்கு மத்திய அரசு விருதுபெற்றுத் தருவது குறித்து பின்னர் யோசிக்கப்படும்.
முதலில் ராஜ்குமார் விடுதலையாக வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பமும்.
வீரப்பனுக்கும், தமிழ்நாடு விடுதலைப்படை இயக்கம் என்ற தீவிரவாத இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதாக செய்திகள் வந்துள்ளன. மற்றபடிஉறுதியான தகவல் இல்லை. ஒருவேளை அவரே தமிழ்த் தீவிரவாதியாக மாறியிருக்கலாம்.
வீரப்பனைத் தேடி காட்டுக்குள் சென்ற கோபால், வீரப்பனை ஞாயிறு காலை சந்தித்து விட்டதாக தகவல் வந்துள்ளது. மேல் விவரம் ஏதும்தெரியவில்லை.
ராஜ்குமார் விடுதலை செய்யப்பட்ட பிறகு வீரப்பனுக்கு எதிராக தீவிரமாக நடவடிக்கை மேற்கொள்வதா அல்லது அவரைக் கைது செய்வதா என்பதுபற்றி யோசிக்கப்படும் என்றார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications