குஜராத் பந்த்தில் வன்முறை ... 5 பேர் கொலை
அகமதாபாத்:
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் 100 பேர் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து விஸ்வ ஹிந்து பரிஷத் மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் குஜராத்தில் நடத்திய முழுஅடைப்பின்போது போராட்டத்தை அடுத்து வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.
இந்த வன்முறைச் சம்பவங்களின் போது சூரத்தில் 5 பேர் பலியானார்கள். 29 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
சபர்கந்தா மாவட்டத்தில் உள்ள லம்பாடியா என்ற கிராமத்தில் வன்முறையாளர்கள் போலீசார் மீது தாக்குதல் நடத்த முயன்றனர். இதைத்தொடர்ந்துபோலீசார் 16 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியும் கலவரக்காரர்களை விரட்டியடித்தனர். இச்சம்பவத்தில் துணை போலீஸ்சப்-இன்ஸ்பெக்டர் ஒருவர் காயமடைந்தார்.
முழு அடைப்பின்போது மாநிலம் முழுவதும் வன்முறைச் சம்பவங்கள் நடந்தன.லம்பாயாத் பகுதியில் முன்னாள் கவுன்சிலர் சுரேஷ் வதோரியா தலைமையிலானகும்பல் ஒன்று போலீஸ்காரர் ஒருவரின் மோட்டார் சைக்கிளுக்குத் தீ வைக்க முயன்றது. அப்போது சுரேஷ் வதோரியாவைப் போலீஸார் கைது செய்தனர்.இதைத் தொடர்ந்து வியாழக்கிழமை இரவு போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு இன்னும் நீடிக்கிறது.
முன்னதாக அமர்நாத் சென்ற பக்தர்கள் காஷ்மீர் தீவிரவாதிகளால் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து கடந்த வியாழக்கிழமை விஸ்வ ஹிந்து பரிஷத்மற்றும் பஜ்ரங்தள் அமைப்பினர் அழைப்பு விடுத்திருந்தனர்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications