தமிழ் எம்.பிக்களை தாஜா செய்கிறது இந்தியத் தூதரகம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

இலங்கையில் புதிய அரசியல் சட்ட சீர்திருத்தத்திற்கு ஆதரவாக ஓட்டளிக்க வேண்டும் என்று தமிழர் கட்சிகளுக்கு இந்திய தூதரக அதிகாரிகள்வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இலங்கை இனப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்காக எதிர்க்கட்சி உள்பட பல்வேறு கட்சிகளின் கடும் எதிர்ப்பை மீறி அதிபர் சந்திரிகா புதியஅரசியல் சட்ட சீர்திருத்த மசோதாவை கடந்த வாரம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவில் 2 லட்சம் முதல் 4 லட்சம் வரைதமிழர்களுக்கு குடியுரிமை வழங்குவது உள்பட பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் சட்டதிருத்தம் குறித்த விவாதம் திங்கள்கிழமை நடக்கிறது. விவாதத்திற்குப்பின ஆகஸ்ட் 9 ம் தேதி வாக்கெடுப்பு நடக்கிறது. கொழும்பில்உள்ள இந்திய உயர்மட்டக் குழுவினர், தமிழர் கட்சித் தலைவர்களை நேரில் சந்தித்து புதிய அரசியல் சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவாக ஓட்டளிக்குமாறுகேட்டுக்கொண்டனர்.

ஆனால் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் நடக்கும் புதிய அரசியல் சட்டதிருத்த மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிப்பதா? இல்லையா? என்பது குறித்துதமிழர் கட்சிகள் தங்களது இறுதி முடிவைத் தெரிவிக்கவில்லை.

டி.யூ.எல்.எப், டி.பி.எல்.எப், டெலோ, சிலோன் தொண்டர்கள் காங்கிரஸ் ஆகிய அமைப்பினர் வாக்கெடுப்புக்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து இன்னும்முடிவெடுக்கவில்லை.

மொத்தம் உள்ள 225 எம்பிக்களில் 150 எம்பிக்களின் ஆதரவு சந்திரிகா குமாரதுங்கா அரசுக்குத் தேவைப்படுகிறது. இதில் சந்திரிகா கட்சியானமக்கள் கட்சிக்கு 111 எம்பிக்கள் உள்ளனர். தமிழர் கட்சிகள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களித்தாலும், ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவும்இருந்தால்தான் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும்.

இதற்கிடையே ஐக்கிய தேசியக் கட்சியில் உள்ள எம்பிக்களுக்கு ஆளும்கட்சி பணம் கொடுத்து தங்கள் மசோதாவுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறுவேண்டுகோள் விடுப்பதாகவும் கூறப்படுகிறது. இதற்காக ஐக்கிய தேசியக் கட்சி எம்பிக்களுக்கு கார், வீடு போன்றவை தருவதாக உறுதியளித்துள்ளபல விஷயங்கள் டேப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் புதிய அரசியல் சட்டதிருத்தத்திற்கான மசோதா குறித்த விவாதம் திங்கள்கிழமை நாடாளுமன்றத்தில் நடக்கிறது.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+