கோவை, நீலகிரியில் கன மழை ... போக்குவரத்து பாதிப்பு
Subscribe to Oneindia Tamil
கோவை:
கோவை, நீலகிரி மாவட்டங்களில் பலத்த மழை பெய்ததாலும், பல இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவினாலும்போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை துவங்கியதையடுத்து, கடந்த சில தினங்களாக கோவை, நீலகிரிமாவட்டங்களில் நல்ல மழை பெய்யத் தொடங்கியது. ஆகஸ்ட் 5ம் தேதி மாலை கோவையில் பலத்த மழைபெய்தது. பல இடங்களில் மழை வெள்ளம் கரை புரண்டோடியது. இதனால், பல ரோடுகளில் பஸ் போக்குவரத்துவேறு வழியாக மாற்றி விடப்பட்டது.
நீலகிரியில் பெய்த மழையால், பல இடங்களில் சிறிய அளவிலான நிலச் சரிவு ஏற்பட்டது. இதனால் போக்குவரத்துபாதிப்பு ஏற்பட்டது. பின்னர் நிலச் சரிவு அகற்றப்பட்டு, போக்குவரத்து சீரமைக்கப்பட்டது. இன்னும் இரண்டுநாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.












Click it and Unblock the Notifications