பூடான் நிலச்சரிவில் 200 பேர் சாவு
கல்கத்தா:
கடும் மழை மற்றும் நிலச்சரிவுக்கு பூடானில் 200 பேர் இறந்தனர்.
கடந்த வியாழக்கிழமை முதல் பெய்து வரும் கடும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் மேற்கு வங்காளத்தில் உள்ள ஜய்கன் நகருக்கு அருகே உள்ளபூட்டானின் பஷாகா கிராமத்தில் 200 பேர் கொல்லப்பட்டனர்.
இதுவரை 180 உடல்கள் சம்பவம் நடந்த பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளன.
பாதிக்கப்பட்ட கிராமத்திற்கு செல்லும் சாலைகள் அனைத்தும் மழையில் அடித்துச் செல்லப்பட்டதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இதுதவிர சுக்கா மற்றும் தலைநகர் திம்பு நகரங்களுக்கு இடையேயான சாலை தொடர்பு முற்றிலும் தடைபட்டுள்ளது. இதே போல் புன்ட்சோலிங்நகருக்கும், பூடானின் பிற பகுதிகளுக்குமான சாலைப் போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கானவர்கள் மழையால் வீடிழந்து தவிக்கின்றனர். புட்சோலிங்கில் தங்கியிருக்கும் இந்திய ராணுவ வீரர்கள் இதுவரை 87 உடல்களைநிலச்சரிவு நடந்த இடத்திலிருந்து மீட்டுள்ளனர். பூடான் அரசு கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்திய அரசு, டார்ஜிலிங்கிலிருந்து உதவிகளை அனுப்பியுள்ளது.
இரண்டு தொழிற்சாலைகளின் குடியிருப்புப் பகுதிகள் மழை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படன. சுக்கா நீர் மின் திட்டப் பகுதியும், இதில் சேதமடைந்தது எனராணுவ வீரர்கள் தெரிவித்தனர்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications