தொழில் ஆய்வுக்காக திருப்பூர் வரும் ஹார்வர்ட் மாணவர்கள்

Subscribe to Oneindia Tamil

கோவை:

திருப்பூரில் தொழில் நிலவரம் குறித்து ஆய்வு நடத்த அமெரிக்காவில் உள்ள ஹார்வார்டு பல்கலைக் கழக மாணவர்கள் வருகின்றனர்.

இது பற்றி அமெரிக்க ஹார்வார்டு பல்கலைக் கழகத்தின் சர்வதேச ஆய்வுத் துறையின் தலைவர் ஜாஃப்ரே கூறியதாவது:

ஹார்வார்டு பல்கலைக் கழகம் சர்வதேச அளவில் வணிக மையங்கள், தொழில் நிறுவனங்களை ஆராய்ந்து வருகிறது. இந்த ஆய்வின் மூலம் தொழில்வளர்ச்சியை அதிகரிக்க இயலும்.

இந்தியாவில் இரண்டு இடங்களை ஆய்விற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளது. முதலாவது மத்திய அரசு உதவியுடன் ஆய்வு நடத்தப்படும். இரண்டாவது மாநிலஅரசின் உதவியுடன் ஆய்வு நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் உள்ள திருப்பூர் இந்த ஆய்விற்காகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இங்கு தொழிற்சாலைகளின் நிலை, தொழிலாளர்களின் நிலை, தொழிலாளர்கள் நலச் சட்டம், அடிப்படை வசதி, உட்பட பல்வேறு நிலைகள் பற்றி ஆய்வுமேற்கொள்ளப்படும் என்று ஜாஃப்ரே தெரிவித்தார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்கத் தலைவர் பொன்னுசாமி, ஜாஃப்ரேக்குத் தேவையான தகவல்களைத் திரட்டித் தரவும், மாணவர்களின் ஆய்விற்கு உதவவும்,முடிவு செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+