காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சி? மகாஜன் விளக்கம்

Subscribe to Oneindia Tamil

நாக்பூர்:

அமர்நாத் படுகொலை படுகொலைச் சம்பவத்தையடுத்து ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் எண்ணம் இல்லை என்று மத்தியதகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் பிரமோத் மகாஜன் கூறியள்ளார்.

நாக்பூரில் ஆகஸ்ட் 26 ம் தேதி பாரதிய ஜனதாக் கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூடுகிறது. இதற்கான ஏற்பாடுகளைக் கவனிக்க பிரமோத்மகாஜன் ஞாயிற்றுக்கிழமை நாக்பூர் வந்திருந்தார். அங்கு செய்தியாளர்களிடம் பேசுகையில், எல்லைப் பகுதியில் பதட்டத்தைத் தணிப்பதற்கு மத்திய அரசுஅனைத்து முயற்சிகளையும் எடுத்து வருகிறது. பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத அமைப்பான ஹிஸ்புல் முஜாஹிதினுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது.

காஷ்மீர் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சுயாட்சித் தீர்மானத்தை மத்திய அரசு நிராகரித்து விட்டது. அரசியலமைப்புச் சட்ட விதி 370 ன் படி கூடுதல்அதிகாரம் வேண்டுமானால் வழங்கலாம்.

அமர்நாத் யாத்ரீகர்கள் படுகொலைச் சம்பவத்தையடுத்து, காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்று ஆர்.எஸ்.எஸ்.இயக்கத் தலைவர்சுதர்சன் என்று கூறியுள்ளார். ஆனால் ஜனாதிபதி ஆட்சியை மத்திய அரசு, அமல்படுத்தப்படாது என்றார் பிரமோத் மகாஜன்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+