நீதிமன்றத்தைப் புறக்கணிக்கிறார்கள் வழக்கறிஞர்கள்
ஈரோடு:
தமிழ்நாட்டில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதைக் கண்டித்து, ஆகஸ்ட் 9ம் தேதி நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட வழக்கறிஞர்கள் முடிவு செய்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு, பாண்டிச்சேரி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பின் தலைவர் ஈ.வி விஸ்வநாதன் ஈரோட்டில் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் பல இடங்களில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுகின்றனர். திருச்சியில் ஒரு வழக்கறிஞரை, கிராம நிர்வாக அதிகாரி அவமானப்படுத்தியுள்ளார்.
குளித்தலை மற்றும் நாகர்கோயிலில் வழக்கறிஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் வழக்கறிஞர்கள் தாக்கப்படுவது தொடர்கதையாகிவருகிறது. இத்தகைய தாக்குதல்களைக் கண்டித்து ஆகஸ்ட் 9ம் தேதி வழக்கறிஞர்கள் கூட்டமைப்பு, நீதிமன்றப் புறக்கணிப்பில் ஈடுபட முடிவு செய்துள்ளது.
இவ்வாறு வழக்கறிஞர்கள் தாக்கப்படுவதை உடனடியாக விசாரணை நடத்த, மாவட்ட கலெக்டர், எஸ்.பி., மற்றும் பார் கவுன்சில் தலைவர்கள்தலைமையில் ஒரு கமிட்டி அமைக்க வேண்டும் என்று விஸ்வநாதன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications