காக்கிச் சட்டைகள் செய்து வைத்த கல்யாணம்
சென்னை:
வீட்டை விட்டு ஓடிவந்த காதல் ஜோடிக்கு போலீஸ் நிலையத்தில் அதிகாரிகள் முன்னிலையில் திருமணம்நடைபெற்றது.
சென்னை, பழவந்தாங்கலைச் சேர்ந்தவர் ராஜசேகரன். இவரும் பாடி, கொரட்டூரைச் சேர்ந்த நித்யா என்றபெண்ணும் கடந்த 3 ஆண்டுகளாகக் காதலித்து வந்தனர். இந் நிலையில், நித்யாவுக்கு வேறு இடத்தில் திருமணம்செய்து வைக்கும் முயற்சியில் அவரதுபெற்றோர் ஈடுபட்டனர்.
இதையடுத்து காதலர் இருவரும் வீட்டை விட்டு ஓடிவந்து பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர்.
ராஜசேகரனுடன் சேர்ந்து வாழ விடாமல் என் பெற்றோர் என்னை மிரட்டுகின்றனர். எப்படியாவது ராஜசேகரனுடன்சேர்ந்து வாழ உதவி செய்யும்படி போலீஸாரிடம் நித்யா கூறினார். இதையடுத்து இருவருடையகுடும்பத்தினரையும் அழைத்து போலீஸார் பேசினர்.
ஆனால்,திருமணத்துக்கு அவர்கள் சம்மதிக்காமல் சென்றுவிட்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் முன்னிலையில்,போலீஸ் நிலையத்திலேயே ராஜசேகரனும், நித்யாவும் திருமணம் செய்து கொண்டனர்.












Click it and Unblock the Notifications