முன்னெச்சரிக்கையாக 1000 பேர் கைது
பெங்களூர்:
பெங்களூரில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதட்டத்தைத் தணிக்க போலீஸ் ரோந்து தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நடிகர் ராஜ்குமார் வீரப்பனால் கடத்திச் செல்லப்பட்டதையொட்டி பெங்களூரில் கலவரம் வெடித்தது. கல்வீச்சு, தீவைப்பு சம்பவங்கள் நடந்தது.
வீரப்பனின் நிபந்தனைகள் அடங்கிய கேசட் வந்ததைத் தொடர்ந்து பல்வேறு அனுமானங்களால் பெங்களூரில் மேலும் பதட்டம் ஏற்பட்டது.
இதையொட்டி பெங்களூர் நகர போலீஸ் கமிஷனர் மடியாள் நிருபர்களிடம் பேசுகையில், பெங்களூரில் ஞாயிற்றுக்கிழமை இரவு மட்டும் முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக 147 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுவரை கைதானவர்களின் எண்ணிக்கை 900 க்கும் அதிகமாக உயர்ந்துள்ளது.
பெங்களூர் நகர போலீஸார் 6 ஆயிரம் பேரும், கர்நாடக ஆயுதப்படை போலீஸார் 1800 பேரும் தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
இதுதவிர மத்தி ஆயுதப் படை, ஆந்திர மாநில போலீஸார் உள்பட 800 பேர் பாதுகாப்புப் பணியில்ஈடுபட்டுள்ளனர். நகரில் இப்போது அமைதியான சூழ்நிலை நிலவி வருகிறது என்றார் கமிஷனர் மடியாள்.












Click it and Unblock the Notifications