தமிழ் தடா கைதிகளை விடுவிக்க தயாராகிறது கர்நாடகம்
பெங்களூர்:
வீரப்பனின் கோரிக்கைகளில் ஒன்றான, மைசூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள தமிழர்களான தடா கைதிகளைவிடுவிக்கத் தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் கர்நாடக அரசு செய்து வருகிறது என கர்நாடத போலீஸ்டி.ஜி.பி.தினகர் கூறினார்.
இந்த தடா கைதிகளில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்கள். கொல்லேகால், மைசூர் மாவட்டத்தில் காட்டுப்பகுதிகளைச் சேர்ந்த இவர்கள் வீரப்பனுக்கு உதவியதாகக் கூறி சிறப்பு அதிரடிப்படையால் கைது செய்யப்பட்டுதடா சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். விசாரணை ஏதும் இல்லாமல் 8 வருடங்களுக்கும் மேலாகசிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனால் தடா கைதிகள் எந்த நிமிடமும் விடுவிக்கப்படலாம் என்று தெரிகிறது. வீரப்பனின் கோரிக்கைகளுக்குபதில் அனுப்பியுள்ள இரு மாநில அரசுகளும் வீரப்பனின் அடுத்த கட்ட நடவடிக்கையைப் பொறுத்து தடாகைதிகளை விடுவிப்பதா, வேண்டாமா என்பதை முடிவு செய்யும்.
தமிழக பஸ் மீது கல்வீச்சு:
தினகர் தொடர்ந்து கூறுகையில், இதற்கிடையே, வீரப்பன் விதித்துள்ள 10 கோரிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்துபெங்களூரில் சில இடங்களில் கும்பல்கள் வன்முறையில் இறங்கின. தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியானதொம்மலூர் பகுதியில் பலர் கலவரத்தில் ஈடுபட்டனர்.
இரவு 11.30 மணிக்கு அங்கு சென்ற பஸ்கள் மற்றும் பிற வாகனங்கள் மேல் கல்வீச்சு நடந்தது. இதனால் தொம்லூர்பகுதியில் பதற்றம் ஏற்பட்டது. இதேபோல் ஓசூர் ரோடு பகுதியிலும் தமிழ்நாடு அரசு பஸ் மீது சிலர் கற்களை வீசித்தாக்கினர். உடனடியாக போலீஸார் சம்பவ இடத்திற்குச் சென்று நிலைமையைக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
கலவரம் தொடராதவாறு மத்திய ரிசர்வ் போலீஸார் ஓசூர் ரோடு பகுதியில் காவலில் ஈடுபட்டு வருகின்றனர்.தற்போது நகரில் அமைதி திரும்பி வருகிறது என்றார் டி.ஜி.பி.தினகர்.












Click it and Unblock the Notifications