நக்கீரன் நிருபர் கொலை... சி.பி.சி.ஐ.டி. விசாரிக்கும்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
நக்கீரன் பத்திரிக்கை நிருபர் செல்வராஜ் கொலைச் சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இது குறித்து அரசு வெளியிட்ட அறிக்கை:
திருச்சிக்கு அருகில் உள்ள பெரம்பலூர் பகுதியில் சில தினங்களுக்கு முன் ஓட்டல் ஒன்றில் சாப்பிட்டு விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நிருபர் செல்வராஜைஅடையாளம் தெரியாத கும்பல் ஒன்று வெட்டிக் கொலை செய்தது.
இதுதொடர்பாக 9 பேரைப் போலீசார் கைது செய்தனர். இந்தக் கொலை தொடர்பாக மேலும் இருவரைப் போலீஸார் தேடி வருகின்றனர்.
இந்நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதி, இந்தக் கொலை தொடர்பாக சிபிசிஐடி போலீஸார் விசாரணை செய்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றுஉத்தரவிட்டுள்ளார் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications