48 மணி நேரத்திற்குள் ராஜ்குமாரை விடுவியுங்கள்...!
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
கன்னட நடிகர் ராஜ்குமாரை அடுத்த 48 மணிநேரத்தில் விடுவிக்கக் கோரி வீரப்பனுக்கு ரேடியோ மூலம் கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமை அகில இந்திய வானொலி நிலையம் மூலம் அவர் வெளியிட்டுள்ள செய்தியில், கர்நாடகா மற்றும் தமிழக அரசுகள் வீரப்பனின்பெரும்பாலான கோரிக்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளது. இதனால் வீரப்பன், நடிகர் ராஜ்குமாரையும், அவரது உறவினர்களையும் 48 மணி நேரத்திற்குள்விடுவிக்க வேண்டும் என்றார் கிருஷ்ணா.
இருப்பினும், காட்டுப்பகுதியில் போலீஸார் தீவிரமாகக் கண்காணித்து வருகின்றனர். ஆந்திரா, மகாராஷ்டிரா மாநில போலீஸாரும் பாதுகாப்புப் பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இன்னும் இரண்டு நாட்களுக்கு பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications