கோமாதா பூஜை நடத்திய தாமரைக்கனி
ஸ்ரீவில்லிப்புத்தூர்:
அ.தி.மு.க. எம்.எல்.ஏ. தாமரைக்கனி பசு பக்தர்கள் புடை சூழ கோமாதா பூஜையைதலைமை ஏற்று நடத்தினார்.
சமீபத்தில், ஸ்ரீவில்லிப்புத்தூரிலிருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்திச் செல்லப்பட்டபசு மாடுகளை மீட்டு பரபரப்பை ஏற்படுத்தினார் தாமரைக்கனி. அந்த மாடுகள்மாமிசத்திற்காக கேரளாவுக்கு கொண்டு செல்லப்படுவதாக அவர் புகார் கூறியிருந்தார்.
இந்த நிலையில் காஞ்சிபுரத்தில் நடந்த பசு வதைத் தடுப்பு மாநாட்டில், ஸ்ரீ ஜயேந்திரசரஸ்வதி ஸ்வாமிகள் பசு வதை செய்வது தவறு. பசுக்களைப் பாதுகாக்க வேண்டும்என்று கூறியிருந்தார்.இந்த மாநாட்டில் தாமரைக் கனியும் கலந்து கொண்டார்.
இந்தச் சூழ்நிலையில், காஞ்சி பெரியவரின் அறிவுரையின்படி கோமாதா பூஜைநடத்தியுள்ளார் தாமரைக்கனி.கோமாதா பூஜை நடத்தியதால் நான் பா.ஜ.க.விலோ,இந்து முண்ணணியிலோ சேர்ந்து விட்டதாக நினைக்க வேண்டாம். நான் என்றுமேஎம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு விசுவாசமானவன் என்றார்.
கோமாதா பூஜையையொட்டி ஊர்லவமும் நடந்தது. இதில், அனைத்து வியாபாரிகள்சங்கத்தினர், இந்து முண்ணனித் தொண்டர்கள், பசு பக்தர்கள் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு பசு வதையை தடுக்கும் சட்டத்தை பிறப்பிக்க வேண்டும். தமிழகக்கோயில்களில் கோமாதா பூஜயை தினமும் நடத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்திதீர்மானங்கள் இயற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications