சென்னைக்கு வந்த தேயிலை விவசாயிகள் போராட்டம்
சென்னை:
வெளிநாட்டிலிருந்து தேயிலை இறக்குமதி செய்யக்கூடாது என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளைவலியுறுத்தி நீலகிரி மாவட்ட தேயிலைத் தொழிளாளர்கள், சென்னையில் திங்கள்கிழமை உண்ணாவிரதம்இருந்தனர்.
சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகை எதிரே நடந்த இந்த உண்ணாவிரதத்தை கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலர் நல்லகண்ணு தொடங்கி வைத்தார்.
தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆதரவாக பழனிச்சாமி, சுப்பராயன், பெரியசாமி, சிவபுண்ணியம்ஆகிய சட்டப்பேரவை உறுப்பினர்களும் இந்த உண்ணாவிரதத்தில் கலந்து கொண்டனர்.
மத்திய அரசு சமீபத்தில் கொண்டு வந்த ஏற்றுமதி இறக்குமதி கொள்கையை அடுத்து வெளிநாட்டிலிருந்து தேயிலைஇறக்குமதி செய்ய அனுமதிக்கப்பட்டது. இதனால், தேயிலையின் விலை வீழ்ச்சியடைந்தது. தேயிலை விலைவீழ்ச்சியால் தேயிலைத் தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். வெளிநாட்டிலிருந்து தேயிலை இறக்குமதிசெய்வதற்குத் தடை விதிக்கவேண்டும்.
தேயிலை கிலோ ஒன்றுக்கு ரூ.15 என விலை நிர்ணயம் செய்யவேண்டும். போராட்டத்தில் ஈடுபட்டு சிறையில்இருக்கும் தொழிலாளர்களை உடனடியாக விடுதலை செய்யவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி நீலகிரி மாவட்ட தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் சென்னையில் உண்ணாவிரதம்மேற்கொண்டனர்.












Click it and Unblock the Notifications