2 பிணைக் கைதிகள் இன்று விடுவிப்பு?
பெங்களூர்:
வீரப்பனின் நிபந்தனைகளுக்கு இருமாநில அரசுகளும் பதில் அனுப்பியதையடுத்து, திங்கள்கிழமை இரவு நடிகர் ராஜ்குமார் தவிர்த்து அவருடன் பிடித்துச் சென்றஇரு பிணைக்கைதிகளை விடுதலை செய்வார் என்று தெரிகிறது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீரப்பன், கன்னட நடிகர் ராஜ்குமார், அவரது உறவினர்கள் கோவிந்தராஜ், நாகப்பா, நாகேஷ் ஆகியோரைத்துப்பாக்கி முனையில் கடத்திச் சென்றார்.
இந்நிலையில் வீரப்பனின் கோரிக்கைகள் அடங்கிய கேசட் இருமாநில அரசுகளுக்கும் அரசுத் தூதர் கோபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது.
கோரிக்கைகளுக்கு வீரப்பன் திருப்தியடையும் வகையில் இரு மாநில அரசுகளும் பதில்களை அனுப்பியுள்ளனர்.
அந்த பதில்களால் மகிழ்ச்சியடைந்துள்ள வீரப்பன், திங்கள்கிழமை இரவு பிணைக்கைதிகள் நாகப்பா, மற்றும் நாகேஷை விடுவிப்பான் என்று தெரிகிறது.
முன்னதாக சத்தியமங்கலம் காட்டுப்பகுதியை அடுத்துள்ள புனஞ்சனூர் செக்போஸ்ட் பகுதியில் காவலில் இருக்கும் போலீசாரை இரண்டு கிலோ மீட்டர் தூரம்வரை பின்வாங்கும் படி கர்நாடக அரசு கேட்டுக்கொண்டுள்ளது.
ஏனெனில் போலீஸார் தன்னைத்தான் பிடிக்க வருகிறார்கள் என்று வீரப்பன் தவறாக எண்ணாதபடி இருக்க இந்நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாகத்தெரிகிறது.












Click it and Unblock the Notifications