திருந்தி வாழ விரும்புகிறான் வீரப்பன் என்கிறார் வைகோ

Subscribe to Oneindia Tamil

கிருஷ்ணகிரி:

வீரப்பன் திருந்தி வாழ முன்வருவதால் அவனுக்கு பொது மன்னிப்பு வழங்கலாம் என்பது என்னுடைய கருத்து என கிருஷ்ணகிரியில் ம.தி.மு.க, பொதுச் செயலர்வைகோ கூறினார்.

கிருஷ்ணகிரியில் வைகோ நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:

சம்பல் பள்ளத்தாக்கில் இருந்த கொள்ளையர்கள் திருந்தி வாழ ஜெயப்பிரகாஷ் நாராயணன் வாய்ப்பு உருவாக்கிக் கொடுத்தார். இதையே வீரப்பன்விஷயத்திலும் பின்பற்றலாம்.

வீரப்பனைப் பொருத்தமட்டில் திருந்தி வாழ முன்வருவதால், அவனுக்குப் பொதுமன்னிப்பு வழங்கலாம் என்பது என்னுடைய கருத்து.

கன்னட நடிகர் ராஜ்குமாரைக் கடத்திய பிறகு தான், கர்நாடக அரசும், தமிழக அரசும் அவனது கோரிக்கைகளை பரிசீலனை செய்து வருகின்றன.

பாரதிய ஜனதா தலைமையில் உள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணி வலுப் பெற்று வருகிறது. காங்கிரசுக்கு தற்போது மூடு விழா நடந்து வருகிறது.மாநில சுயாட்சி கருத்துக்கு கூட்டணி அரசு விரோதமானது அல்ல. மாநில சுயாட்சி தனி நாடு கோரிக்கை அல்ல. இது இந்தியாவில் ஒற்றுமையைஏற்படுத்தும்.

கடந்த 95ம் ஆண்டு திருச்சியில் ம.தி.மு.க மாநாடு நடந்தது. இதில் இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக எடுத்த ம.தி.மு.க. முடிவில் எவ்வித மாற்றம்இல்லை.

சமீபத்தில் சர்ச்சுகள் மீது நடந்த தாக்குதல்களில் ஐ.எஸ்.ஐ சதி வேலை உள்ளது. வாஜ்பாய் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்றநோக்கத்தில் இந்த தாக்குதல் நடந்துள்ளது. இதனை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என்றார் வைகோ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+