பெங்களூர்: நம்பிக்கை கலந்த அச்சத்தில் தமிழர்கள்

Subscribe to Oneindia Tamil

பெங்களூர்:

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து ஏற்படும் கலவரத்தைத் தடுப்பதற்காக பெங்களூரில் அடுத்தவாரம் வரை 144 தடையுத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.

ராஜ்குமாரை வீரப்பன் நிச்சயம் விடுவித்துவிடுவான் என்ற நம்பிக்கை இருந்தாலும், நாட்களை வீரப்பன் கடத்திக்கொண்டே செல்வதால் அச்சமும் அடைந்துள்ளனர்.

ஜூன் 30 ம் தேதி கன்னட நடிகர் ராஜ்குமாரும், அவரது உறவினர்கள் மூன்று பேரும் சந்தனக் கடத்தல் வீரப்பன்மற்றும் அவனது கூட்டாளிகளால் கடத்தப்பட்டனர்.

இதையடுத்து பெங்களூர் நகர் முழுவதும் கலவரம் ஏற்பட்டது. பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டன. குறிப்பாகதமிழக வகனங்களும், தமிழர்களின் கடைகளும் தாக்கப்பட்டன. பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

நகரில் கலவரத்தைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்காக ஜூலை 31 ம் தேதி முதல் 144 தடையுத்தரவுபிறப்பிக்கப்பட்டது.

வீரப்பன் இன்னும் ராஜ்குமாரை விடுவிக்காத நிலையில், நகரில் எந்த நிமிடமும் பிரச்சனை ஏற்படலாம் எனபோலீசார் கருதுகின்றனர். இதனால் அடுத்த ஒருவாரத்திற்கு 144 தடையுத்தரவை நீடித்து போலீஸ் கமிஷனர்மடியாள் உத்தரவிட்டுள்ளார்.

நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதையடுத்து நகரில் கலவர பயத்தில் பொதுமக்கள் தெருவில் நடமாடவேபயப்படுகின்றனர். குறிப்பாய் இரவு நேரங்களில் வாகனப்போக்குவரத்து மிகவும் குறைவாகவே உள்ளது.

தெருக்களில் எந்த நிமிடம் பதட்டம் ஏற்படுமோ என்ற பயம் சூழ்நிலை நிலவுகிறது. ஹோட்டல்களிலும், பிறஇடங்களிலும் பொதுமக்களின் வருகை மிகவும் குறைவாகவே உள்ளது. கடந்த வார இறுதி நாட்களில்ஹோட்டல்கள் வெறிச்சோடிக் கிடந்தன.

பெங்களூரைச் சேர்ந்த வியாபாரி பசவராஜ் கூறுகையில், நான் எந்த வித ரிஸ்க்கும் எடுக்க விரும்பவில்லை.பி.வி.கே. ஐயங்கார் ரோட்டில் எங்களது கடை இயங்கி வருகிறது. ராஜ்குமார் கடத்தப்பட்ட தினத்திலிருந்துஎங்களது வியாபாரத்தில் நஷ்டம் ஏற்பட ஆரம்பித்து விட்டது. கலவரத்தில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த சிலர்கடையை மூடும்படி அடிக்கடி வந்து தொந்தரவு கொடுக்கின்றனர் என்றார்.

ராஜ்குமார் விடுதலை செய்யப்படும் வரை பெங்களூரில் இதே நிலை தான் தொடரும் என்கின்றனர் பொதுமக்கள்சிலர்.

மேலும் நகரில் ஜூலை 31 ம் தேதி முதல் தியேட்டர்கள் எதுவும் இயங்கவில்லை. எந்த நேரமும் ராஜ்குமார்ரசிகர்கள் தகராறு செய்யலாம் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.கேபிள் டிவியில் தமிழ் சேனல் ஒளிபரப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன.

தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான அல்சூர் கேபிள் டிவி நிறுவன ஊழியர் ராஜேந்திரன் கூறுகையில்,பெங்களூரில் கன்னட மொழி பேசும் மக்கள் அதிகம் வசித்தாலும் இங்கு வாழும்70 சதவீதம் பேர் தமிழ்நிகழ்ச்சிகளையே விரும்பிப் பார்க்கக் கூடியவர்கள்.

வீரப்பன் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் என்பதாலும், சன், ராஜ், விஜய் டிவி நிகழ்ச்சிகளை ஒளிபரப்பினால் கலவரம்வெடிக்கும் என்பதாலும் இந்த சேனல்கள் மூலம் தமிழ் நிகழச்சிகளை ஒளிபரப்புவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதுஎன்றார்.

அல்சூர், ஸ்ரீராமபுரம், கன்டோன்மென்ட் பகுதிகளில் வசிக்கும் தமிழர்கள் எந்த நேரத்தில் என்ன நடக்குமோ என்றஅச்சத்திலேயே வாழ்கிறார்கள்.

மளிகைச் சாமான்கள் மற்றும் பிற அத்தியாவசியப் பொருட்களை ஏற்றிக் கொண்டு வரும் லாரிகள் அனைத்தும்நிறுத்தி வைக்கப்பட்டு போலீஸாரின் பலத்த சோதனைக்குப் பின்னரே அனுப்பப்படுகின்றன. குறிப்பாக தமிழ்நாடுபதிவு எண் கொண்ட வாகனங்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகின்றன.

கர்நாடகத்தின் வடக்குப் பகுதியிலிருந்து பெங்களூர் வரும் கட்டிடத் தொழிலாளர்கள் கலவரம் காரணமாக மீண்டும்சொந்த ஊருக்கே திரும்பி விடும் நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டனர்.

தன் மனைவி மற்றும் குழந்தைகளுடன் தனது சொந்த ஊரான தார்வார்டுக்குச் செல்லும் கிருஷ்ணா நாயக்ரயில்நிலையத்தில் நிருபர்களிடம் கூறுகையில், கலவரத்தில் ஈடுபடும் கும்பலால் முதலில் பாதிக்கப்படுபவர்கள்எங்களைப் போன்ற அப்பாவி மக்கள்தான். அதனால் உயிருக்குப் பயந்து எங்கள் சொந்த ஊருக்கே திரும்பிப்போகிறோம் என்றார்.

யு.என்.ஐ.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+