பா.ஜ.க. 5வது தலைவராக பங்காரு லட்சுமண் தேர்வு
Subscribe to Oneindia Tamil
டெல்லி:
பாரதிய ஜனதா கட்சித் தலைவராக பங்காரு லட்சுமணன் செவ்வாய்க்கிழமை ஒருமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
பாரதிய ஜனதாக் கட்சியின் அகில இந்திய தலைவராக குஷாபவ் தாக்கரே இருக்கிறார். ஆகஸ்ட் 27 ம் தேதி நாக்பூரில் நடக்கும்செயற்குழுக் கூட்டத்துடன் அவரது பதவி முடிகிறது.
இதையடுத்து கட்சியின் புதிய தலைவராக பங்காரு லட்சுமண் பொறுப்பேற்கிறார். இதற்காக பாரதிய ஜனதா கட்சியின் சார்பில்இவரது பெயர் முன்மொழியப்பட்டிருந்தது. இவரை எதிரித்து யாரும் போட்டியிடவில்லை.
இதையடுதது இவர் ஒரு மனதாக பா.ஜ.க. தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரி ஓம் பிரகாஷ் கோலிதெரிவித்தார். இவர் பாரதிய ஜனதாக் கட்சியின் ஐந்தாவது தலைவராவார்.
யு.என்.ஐ.












Click it and Unblock the Notifications