கிரிக்கெட் வீரர்கள் வீட்டில் சிக்கிய ஆவணங்கள்: வருமான வரித்துறை ஆராய்கிறது
டெல்லி:
கோடிக்கணக்கில் சொத்து குவித்துள்ள இந்திய கிரிக்கெட் வீரர்களில் வீட்டில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களைவருமான வரித்துறை ஆராய்த்து வருகிறது என மத்திய நிதியமச்ைசர் யஷ்வந்த் சின்ஹா கூறினார்.
ராஜ்யசபாவில் செவ்வாய்க்கிழமை அவர் கூறுகையில், இந்த ஆவணங்கள் மீது இறுதி முடிவு ஏதும்எடுக்கப்படவில்லை. டெல்லியில் அஜய் ஜடேஜாவின் உறவினரான சமதா கட்சியின் தலைவி ஜெயா ஜேட்லியின்வீட்டில் நடத்தப்பட்ட சோதனையின்போது வருமான வரித்துறையின் சட்ட-திட்டங்கள் ஏதும் மீறப்படவில்லை.
ஜெயா ஜேட்லியும் அவரது மகளும் வருமான வரித்துறையினருக்கு முழு ஒத்துழைப்பு கொடுத்தனர். ரெய்ட்நடந்தபோது ஜெயா என்னை தொடர்பு கொள்ளவில்லை. அடுத்த நாள் தான் தொடர்பு கொண்டு பேசினார்.ரெய்டை நிறுத்தவும் அவர் முயலவில்லை.
மேட்ச் பிக்ஸிங் குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்தி வருகிறது. சொத்து குவித்த வழக்கு வேறு. எந்த வீரரை இந்தியஅணியில் சேர்க்க வேண்டும் அல்லது சேர்க்கக் கூடாது என்றெல்லாம் வருமான வரித்துறை பரிந்துரைக்க முடியாதுஎன்றார்.
நிதித்துறை இணையமைச்சர் தனஞ்செய குமார் கூறுகையில், மொத்தம் 7 கிரிக்கெட் வீரர்களின் வீட்டில் ரெய்ட்நடந்தது. அசாருதீன், அஜய் ஜடேஜா, கபில் தேவ், நிகில் சோப்ரா, மனோஜ் பிரபாகர், அஜய் ஷர்மா, நவஜோத் சிங்சித்து ஆகியோர் தான் அந்த 7 பேர்.
இது தவிர 2 கிரிக்கெட் வாரிய அதிகாரிகள், வீரர்களுடன் தொடர்புடைய 16 பேர், வீரர்களின் 7 உறவினர்கள்ஆகியோர் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன. இந்த சோதனைகளில் ரூ. 4 கோடி மதிப்புள்ள சொத்துக்களுக்கானஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.












Click it and Unblock the Notifications