ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம் என்கிறார் ஜான்பாண்டியன்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் தமிழர்கள் தொடர்ந்து தாக்கப்பட்டால் சென்னையில் உள்ள ரஜினிகாந்த் வீட்டை முற்றுகையிடுவோம் என்று ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.
தேவேந்திரகுல கூட்டமைப்பின் தலைவர் ஜான் பாண்டியன் நேற்று மதுரையில் நிருபர்களை சந்தித்தார். வீரப்பனுக்கு பொது மன்னிப்பு வழங்கக்கூடாது.
பல போலீஸ் அதிகாரிகளை கொலை செய்ததால் அவர்களது குடும்பம் நடுத்தெருவில் நிற்கிறது. தமிழரான முன்னாள் டி.எஸ்.பி சிதம்பரநாதனை கடத்தியபோது குரல் கொடுக்காத நடிகர் ரஜினி காந்த், இப்பொழுது கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தப்பட்டதை கண்டித்து மட்டும் குரல் கொடுத்துள்ளார். இதுஏன்?
தமிழர்கள் கர்நாடகாவில் தொடர்ந்து தாக்கப்பட்டால் எங்கள் அமைப்பின் சார்பில் ரஜினி வீட்டை முற்றுகையிடுவோம்.
இவ்வாறு ஜாண் பாண்டியன் நிருபர்களிடம் கூறினார்.












Click it and Unblock the Notifications