டாக்டர் கிருஷ்ணசாமியை கைது செய்ய உத்தரவு

Subscribe to Oneindia Tamil

சென்னை:

புதிய தமிழகம் கட்சி தலைவர் டாக்டர் கிருஷ்ணாசாமியை 15 நாட்களுக்குள் கைதுசெய்யுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மாஞ்சோலை டீ எஸ்டேட் விவகாரம் தொடர்பான வழக்கில் கிருஷ்ணசாமி மீதுஜாமீனில் வர முடியாத கைது ஆணையை சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

மாஞ்சோலையில் நடந்த கலவர வழக்கில் டாக்டர் கிருஷ்ணசாமி உட்பட 11 பேர் மீதுகுற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

மாஞ்சோலை டீ எஸ்டேட் கலவரத்தில் இறந்தவரான அந்தோணி முத்துவின்மனைவியான அந்தோணி அம்மாள் தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த சென்னைஉயர் நீதிமன்ற நீதிபதி அப்துல் பாஷா காத்ரி இந்த உத்தரவை பிறப்பித்தார்.

மேலும் அந்தோணி அம்மாள் குடும்பத்துக்கு தகுந்த பாதுகாப்பு அளிக்குமாறும்உத்தரவிட்டுள்ளார்.

அந்தோணி முத்து மாஞ்சோலை டீ எஸ்டேட்டில் சூபர்வைசராக பணியாற்றி வந்தார்.அவர் மாஞ்சோலையில் 1998-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 25-ம் தேதி நடந்தகலவரத்தில் கொல்லப்பட்டார். டாக்டர் கிருஷ்ணசாமியால் தூண்டப்பட்டவர்களால்தான் அவர் கொல்லப்பட்டார் என அந்தோணி முத்துவின் மனைவி தனது வழக்கில்குற்றம் சாட்டியிருந்தார்.

கிருஷ்ணசாமி மீது 1999-ம் வருடம் பிப்ரவரி மாதம் 17-ம் தேதி இந்த வழக்குப் பதிவுசெய்யப்பட்டது. மாஜிஸ்திரேட் பிப்ரவரி மாதம் 24-ம் தேதி ஜாமீனில் வர முடியாதகைது ஆணையை பிறப்பித்த பின்பும் இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

அவர் தலைமறைவாகி விட்டதாக விசாரணை செய்து வந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.ஆனால் அவர் பல கூட்டங்களில் பேசி வருகிறார். அவருக்கு போலீசார் பாதுகாப்பும்அளித்து வருகின்றனர் என்று அந்தோணி அம்மாள் கூறியுள்ளார்.

கொலைக் குற்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பதில் தடைஎதுவும் கிடையாது. குற்றம் சாட்டப்பட்ட கிருஷ்ணசாமியை 15 நாட்களுக்குள் கைதுசெய்யப்பட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+