சிதம்பரத்தில் த.மா.கா. செயற்குழு கூட்டம்

Subscribe to Oneindia Tamil

சென்னை:

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டம் ஆகஸ்ட் 29-ம் தேதிசிதம்பரத்தில் நடைபெறுகிறது.

இக் கூட்டத்துக்கு கட்சித் தலைவர் ஜி.கே. முப்பனார் தலைமை தாங்குகிறார்.

இது தொடர்பாக அக் கட்சியின் துணைத் தலைவர் எஸ்.ஜி. விநாயகமூர்த்திவெளியிட்ட அறிக்கை:

சிதம்பரத்தில் ஆகஸ்ட் 29-ம் தேதி த.மா.காவின் செயற்குழுக் கூட்டம் கட்சித் தலைவர்மூப்பனார் தலைமையில் நடைபெற உள்ளது.

அக் கூட்டத்தில் கட்சியின் அரசியல் ஆலோசனைக் குழு உறுப்பினர்கள், மாநிலநிர்வாகிகள், மாவட்டத் தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டப்பேரவைஉறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள்.

அன்றைய தினம் காமராஜரின் 98-வது பிறத நாள் விழா, முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் 55-வது பிறந்த நாள் ஆகியவற்றையொட்டி சிதம்பரம் நகரில்பொதுக்கூட்டம் நடைபெறும்.

இதில் கட்சித் தலைவர் மூப்பனார் உள்பட கட்சியின் முன்னணித் தலைவர்கள்பேசுகின்றனர் என்றார் விநிாயகமூர்த்தி.

தமிழக சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தலுக்குத்தயாராவதற்கான பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் ஈடுபட்டுள்ளன.

இந் நிலையில், தமாகாவின் செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. அக் கூட்டத்தில்சட்டப்பேரவைத் தேர்தல் குறித்து விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+