என்னை காட்டு ராணி மாதிரி வைத்திருந்தார்: வீரப்பன் மனைவி பேட்டி
பெங்களூர்:
என் கணவர் வீரப்பன் மிகவும் கொடூரமான மனிதர் அல்ல. அவருக்குப் பொதுமன்னிப்பு அளித்தால் அவருடன் மீண்டும் சேர்ந்து அமைதியாக வாழவிரும்புகிறேன் என்று வீரப்பனின் மனைவி முத்துலட்சுமி கூறினார்.
இதோ வீரப்பன் பற்றி மனைவி முத்துலட்சுமி கூறுகிறார்:
வீரப்பனைத் திருமணம் செய்வதற்கு எங்கள் வீட்டில் முதலில் பலத்த எதிர்ப்பு இருந்தது. அதையெல்லாம் மீறி எனது மாமா தான் முன் நின்று எங்கள்திருமணத்தை நடத்தி வைத்தார்.
சில வருடங்கள் அவருடன் காட்டில் வாழ்க்கை நடத்தினேன். 100 ஆண்களுக்கு மத்தியில் காட்டில் வாழ்ந்து வந்தேன். அப்போது வீரப்பன் என்னை மிகவும்அன்பாகக் கவனித்துக் கொண்டார். அங்கு நான் காட்டு ராணியாக வாழ்ந்து வந்தேன்.
அவர் அடிக்கடி என்னிடம் நீயில்லாமல் என்னால் வாழ முடியாது என்று உருக்கமாகக் கூறுவார். என்னைப் பொறுத்தவரை அவர் மிகவும்வித்தியாசமான மனிதர்.
1992 ல் நான் போலீஸாரால் கைது செய்யப்பட்டேன். விடுதலையடைந்த பின் மேட்டூரில் பெட்டிக்கடை வைத்துப் பிழைத்து வருகிறேன். எங்களது 9 வயதுமகள் வித்யாராணி மேட்டூரில் உள்ள கான்வென்ட்டில் மூன்றாம் வகுப்புப் படிக்கிறாள்.
எனது கணவர், வீரப்பன், நடிகர் ராஜ்குமாரைக் கடத்தியபின் பிரச்சனை எதுவும் வரக்கூடாது என்பதற்காக அவளை அந்தப் பள்ளியிலிருந்து வேறுபள்ளிக்கு சேர்க்க முடிவு செய்திருக்கிறேன்.
பிரதமர் வாஜ்பாய், அவருக்கு பொதுமன்னிப்பு கொடுத்தால் அவருடன் மீண்டும் சேர்ந்து வாழவே விரும்புகிறேன். அவருக்கு பொதுமன்னிப்பு வழங்கினால்அவர் அரசியலில் குதிக்கலாம். பூலான்தேவிக்கு பொதுமன்னிப்பு கொடுக்கவில்லையா? அவர் தேர்தலில் நின்று ஜெயிக்கவில்லையா?
அவர் தனக்காக பணம் எதையுமே கேட்கவில்லை. அப்படிப் பணம் கேட்டாலும் அதை அவர் ஏழை-எளிய மக்களின் நலனிற்காகத்தான் கொடுப்பார்.அதில் எந்தவித சந்தேகமும் இல்லை.
120 க்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் போன்ற பல்வேறு குற்றங்கள் புரிந்த வீரப்பனுடன் எப்படி வாழ்க்கை நடத்துகிறீர்கள்என்று கேட்கிறார்கள். அவர் மிகக் கொடூரமான மனிதர் அல்ல. அவரும் மனிதர்தான் என்றார் முத்துலட்சுமி. கடந்த 10 வருடங்களுக்கு மேல் அவர்காட்டிலும், நான் நாட்டிலுமாக வாழ்க்கை நடத்துகிறோம்.
வீரப்பனின் மகள் வித்யாராணி கூறுகையில், என் அப்பா மிகவும் நல்லவர். அவர் யாரையும் காயப்படுத்த மாட்டார். அவர் பொதுமன்னிப்பு பெற்றுசீக்கிரம் திரும்பி வந்து எங்களுடன் வாழ்க்கை நடத்த வேண்டும் என்று விரும்புகிறேன் என்றார்.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications