ரூ. 6 லட்சம் பணத்துடன் நிறுவன மேலாளர் "எஸ்கேப்
கோவை:
கோவையில் ரூ. 6 லட்சம் பணத்துடன் மாயமான கம்பெனி மேலாளரைப் போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கடத்தல்சம்பவத்தில் டிரைவர் கொலை செய்யப்பட்டாரா என்பது குறித்தும் மர்மம் நீடித்து வருகிறது.
கோவை டாடாபாத்தில் உள்ள ஒரு நிறுவனத்திலிருந்து பாங்க்கில் பணம் செலுத்த அந்நிறுவனத்தின் மேலாளர் முத்துகிருஷ்ணன், மற்றும்டிரைவர் லோகநாதன் ஆகியோர் காரில் ரங்கே கவுடர் வீதியில் உள்ள ஒரு வங்கிக்குச் சென்றுள்ளனர். ஆனால், இவர்கள் மீண்டும்கம்பெனிக்குக் திரும்பவில்லை. இதையடுத்து சந்தேகமடைந்த மற்றொரு மேலாளர் ரமேஷ் காட்டூர் போலீசில் புகார் செய்தார்.
இந்தப் புகாரையடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர். அப்போது சத்தியமங்கலம் அருகே டிரைவரைக் கொலை செய்து விட்டு,ஒரு கும்பல் தப்பிச் சென்றதாகத் தகவல் கிடைத்தது. அதே சமயம், கோவை அன்னூர் அருகே கார் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.இதையடுத்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications