2001-ல் புதுவை ... 2006-ல் தமிழகம்

Subscribe to Oneindia Tamil

கரூர்:

தமிழ்நாட்டில் பாட்டாளி மக்கள் கட்சிதான் இரண்டாவது பெரிய கட்சி என்று அக்கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரிவித்தார்.

பா.ம.க.வின் கரூர் சட்டப்பேரவை தொகுதி மாநாட்டில் அவர் பேசியதாவது:

இந்தியாவில் 56 அரசியல் கட்சிகள் உள்ளன. இதில் பா.ம.க.வும் ஒன்று. பாட்டாளிமக்கள் கட்சி ஒரு வித்தியாசமான கட்சி, நல்ல கட்சி, நாணயமான கட்சி,விவசாயிகளுக்காக உழைக்கும் கட்சி, உழைக்கும் மக்களின் உரிமைக்காகக் குரல்கொடுக்கும் கட்சி எது என்றால் அது பாட்டாளி மக்கள் கட்சிதான்.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை மக்களின்அரசியல் அதிகாரத்துக்கும், சமூக நீதிக்காகவும் போராடி வரும் கட்சி பாட்டாளி மக்கள்கட்சி. பா.ம.க. திடீரென்று முளைத்த கட்சியல்ல. லெட்டர்பேடு கட்சியும் அல்ல.

முதலில் 1 சட்டப்பேரவை உறுப்பினர், பின்னர் 4 சட்டப்பேரவை உறுப்பினர், 4நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஒரு மத்திய அமைச்சர், பின்னர் 5 நாடாளுமன்றஉறுப்பினர்கள், 2 மத்திய அமைச்சர்கள் என்று படிப்படியாக வளர்ந்த கட்சி இது.

100 கோடி மக்களை ஆளுகிற மத்திய அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் இடம்பெற்றுள்ளது மகிழ்ச்சியான செய்தியாகும்.

பாட்டாளி மக்கள் கட்சியை வன்னியர் கட்சி என்றும் ஜாதிக் கட்சி என்றும் ஒருவட்டத்துக்குள் திணிக்க பலர் தப்புக் கணக்கு போட்டனர். ஆனால்,

அவர்களே அதை தவறு என்று உணர்ந்து மக்களுக்காக உழைக்கும் கட்சி என்றுபா.ம.க.வைப் பாராட்டுகின்றனர்.

தமிழகத்தில் 1967 வரை காங்கிரஸ் ஆண்டது. அதன் பிறகு தி.மு.க.வும்,அ.தி.மு.க.வும் மாறி மாறி ஆண்டு வருகின்றன. அந்த அரசுகளால் மக்களுக்கு எந்தநன்மையும் கிடைக்கவில்லை. மக்கள் புதிய கட்சியின் ஆட்சியை விரும்புகின்றனர்.அப் புதிய கட்சிதான் பாட்டாளி மக்கள் கட்சி.

தமிழகத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக பாட்டாளி மக்கள் கட்சி வளர்ந்துள்ளது.வருகிற தேர்தலில் இது நிரூபிக்கப்படும். 2001-ல் புதுவையில் ஆட்சியைப்பிடிப்போம். 2006-ல் தமிழக சட்டப் பேரவையில் அதிக இடங்களைப் பெற்றுஇரண்டாவது பெரிய கட்சி என்று பெயரெடுப்போம் என்றார் ராமதாஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+