சமாதியான புதிய அரசியல் சட்டத் திருத்தம்

Subscribe to Oneindia Tamil

கொழும்பு:

அதிபர் சந்திரிகா அரசு அமல்படுத்திய புதிய அரசியல் சட்ட திருத்தம் மீதான வாக்கெடுப்புஒத்திவைக்கப்பட்டதையடுத்து இந்த சட்டதிருத்தத்தின் எதிர்காலம் பெரிய கேள்விக்குறியாகியுள்ளது.

இலங்கையில் தனி ஈழம் கேட்டுப் போராடி வரும் விடுதலைப் புலிகளுக்கும், ராணுவ வீரர்களுக்கும் இடையே பலவருடங்களாக சண்டை நடந்து வருகிறது.

இப்பிரச்சனைக்கு நிரந்தரத் தீர்வு காணுதல், வடகிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழர்களுக்கு கூடுதல் அதிகாரம்வழங்குதல், 2 லட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்களுக்கு குடியுரிமை வழங்குதல் போன்ற பல திருத்தங்களைக்கொண்டது புதிய அரசியல் சட்ட திருத்த மசோதா.

எதிர்க்கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புக்களின் கடுமையான எதிர்ப்புக்களையும் மீறி கடந்த 3 ம் தேதிஇலங்கை நாடாளுமன்றத்தில் அரசியல் சட்ட திருத்த மசோதா தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில் மசோதா மீதான திங்கள்கிழமை விவாதம் நடந்தது. ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான ஐக்கியதேசிய கட்சி, புத்த அமைப்புக்கள், டி.யூ.எல்.எஃப், பிளாட் போன்ற அமைப்புக்கள் விவாதத்தில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்தன.

இந்நிலையில், ஆகஸ்ட் 9 ம் தேதி நடக்கவிருந்த மசோதா மீதான வாக்கெடுப்பு காலவரையறையின்றிஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் ரதநாயகே நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் தனக்கு போதிய எம்.பிக்களின் ஆதரவு இல்லாததால் தான் மசோதாவை நிறைவேற்ற முடியாதநிலைக்கு அதிபர் சந்திரிகா தள்ளப்பட்டார். இனிமேல் அவருக்கு பலம் கூடவும் வாய்ப்பில்லலை. எனவே, அவர்மீண்டும் இந்த மசோதா மீது வாக்கெடுப்பு நடத்தக் கோருவதற்கு வாய்ப்பேயில்லை என்று தான் கருதப்படுகிறது.

மேலும் பாராளுமன்றத்தில் மொத்தம் உள்ள 225 எம்.பி.க்களில் 150 எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால் தான்வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும். பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில் வாக்கெடுப்புநடத்தினாலும் சந்திரிகாவுக்கு வாக்கெடுப்பில் சந்திரிகா அரசால் வெற்றி பெற முடியாது.

சந்திரிகா அமைச்சரவையில் உள்ள அமைச்சர்கள் சரத் அமனுகாமா மற்றும் மங்கள ஸ்வரம்வீராசெவ்வாய்க்கிழமை விடுத்துள்ள கூட்டறிக்கையில், சந்திரிகா அரசின் பதவிக்காலம் ஆகஸ்ட் 24 ம் தேதியுடன்முடிவடைகிறது. இலங்கையில் உள்ள தமிழர் கட்சிகள், புதிய அரசியல் சட்ட திருத்தம் குறித்து விவாதிக்க இன்னும்அதிக கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கேட்டுக் கொண்டுள்ளனர். தமிழர் கட்சிகளில் உள்ள 24எம்.பி.க்களின் ஆதரவு இருந்தால்தான் வாக்கெடுப்பில் வெற்றி பெற முடியும்.

அதனால், அவர்கள் கேட்டுக் கொண்டபடி வாக்கெடுப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. சந்திரிகாவின் பதவிக்காலம்முடிவதற்கு முன் நிச்சயமாக அரசியல் சட்ட திருத்தம் மீதான வாக்கெடுப்பு நடக்கும் என்று அந்த அறிக்கையில்கூறியுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கே கூறுகையில், அரசியல் சட்ட திருத்தம் மீதான வாக்கெடுப்புஒத்திவைக்கப்பட்டது சந்திரிகா அரசுக்குக் கிடைத்துள்ள மாபெரும் தோல்வி. ஐக்கிய தேசியக் கட்சி எம்.பி.க்களைவிலைக்கு வாங்கும் முயற்சியில் இறங்கினார் சந்திரிகா. அவரது கனவு பலிக்கவில்லை என்று கூறியுள்ளார்.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+