வீரர்கள், விவசாயிகள் மோதலால் எல்லையில் பதற்றம்
Subscribe to Oneindia Tamil
ஸ்ரீநகர்:
ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரி மாவட்டத்தில், பாகிஸ்தானுடனான எல்லைப்பகுதியில், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.
அப்பகுதியில் உள்ள விவசாயிகளுக்கும், பாதுகாப்புப் படை வீரர்களுக்கும்இடையிலான மோதல் முற்றியதையடுத்து அங்கு ஊரடங்கு போடப்பட்டுள்ளது.
பதேபூர் கிராமத்தில், உயரமாக வளர்ந்திருந்த , அறுவடை கூட செய்யப்படாமல்இருந்த பயிர்களை ராணுவ வீரர்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டுவெட்டியதையடுத்து வீரர்களுக்கும், விவசாயிகளுக்கும் மோதல் ஏற்பட்டது.இதையடுத்து அப்பகுதியில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது. வீரர்கள் மீது சிலஇடங்களில் விவசாயிகள் தாக்குதலிலும் இறங்கினர். பதிலுக்கு வீரர்களும் தாக்குதல்நடத்தினர்.
இந்தத் தாக்குதல்களில் ஒருவர் இறந்தார். 15 பேர் காயமடைந்தனர். இதையடுத்துமுன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு அமல் செய்யப்பட்டது.
ஐ.ஏ.என்.எஸ்.












Click it and Unblock the Notifications