அமெரிக்க காடுகளை அழித்து வரும் அக்னி

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்:

அமெரிக்காவின் 11 மாநிலங்களில் பற்றி எரியும் காட்டுத் தீயை அணைக்க அமெரிக்க அரசு கடுமையாக போராடி வருகிறது..

50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இப்போதைய காட்டுத்தீ உள்ளது. மேற்கு பகுதியில் உள்ள 11 மாநிலங்களிலும் ஏற்பட்டுள்ள காட்டுத் தீயைக்கட்டுப்படுத்த அரசுக்கு நாள் ஒன்றுக்கு 11 மில்லியன் டாலர் செலவாகிறது.

20,000 தீயணைப்பு வீரர்கள், 2.000 ராணுவ வீரர்களுடன் மேலும் பல கூடுதல் உதவிப் பணியாளர்களும் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.கனடா, ஆஸ்திரேலியா மற்றும் மெக்சிகோ நாடுகளைச் சேர்ந்த பணியாளர்களும் தீயைக் கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதிபர் பில் கிளின்டன், இடாகோ பகுதியில் உள்ள தீயணைப்புத் துறை தலைமையகத்துக்குச் சென்று அங்குள்ள தீயணைப்பு வீரர்களை ஊக்குவித்தார்.

இடாகோ மற்றும் அதற்கு அருகிலுள்ள மொன்டானா பகுதிகள்தான் காட்டுத் தீயால் அதிகம் பாதிக்ப்பட்டவையாகும். இன்னும் அங்குள்ள மவைப்பகுதிகளில் 20க்கும் அதிகமான இடங்களில் தீ எரிந்து வருகிறது.

காட்டுத் தீயைக் கட்டுப்படுத்தும் பணிக்கு, கிளின்டன் மேலும் 150 மில்லியன் டாலர் அளவுக்கு நிதி ஒதுக்கீடு அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

வடகிழக்கு மொன்டானாவில் வசிப்பவர்கள், அங்கிருந்து பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அவ்வாறுவெளியேறுவோர், தினசரி வாழ்க்கைக்கு தேவையான பொருட்களையும் தங்களுடன் எடுத்துச் செல்லுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

ஆகஸ்ட் 7-ம் தேதி வரையிலான காலகட்டத்தில், 65 முறை காட்டுத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதில், 8 லட்சத்து 26,800 ஏக்கர் பரப்பளவுள்ளகாடுகள் அழித்துள்ளன.

ஐ.ஏ.என்.எஸ்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+