For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சாப்ட்வேர் படிக்கட்டுகள்...

By Staff
Google Oneindia Tamil News

நேரடியாக தமிழகத்தின் சாப்ட்வேர் வளர்ச்சி குறித்த விவரங்களுக்குள் நுழைவதற்கு முன் கம்ப்யூட்டர் வாசலுக்கு நம்மை அழைத்துச் சென்ற தமிழகத்தின்தொழில்துறை பின்னணியையும், பொதுவாக தமிழகம் குறித்த சில யூஸ்புல் புள்ளி விவரங்களையும் தெரிந்து கொள்வதும் நல்லது.

தமிழகத்தின் மக்கள் தொகை சுமார் 6.3 கோடி. இதில் நகர்ப்புறத்தில் வசிப்பவர்கள் 3.4 கோடி. நகர்ப்புற மக்கள் தொகையில் பிற மாநிலங்களைஒப்பிடும்போது தமிழகம் மிக மிக முன்னேறி எங்கேயோ போய்விட்டது. அதே போல குடும்பக் கட்டுப்பாட்டை அமல்படுத்துவதிலும் தமிழகம் தேசியசாதனையே புரிந்து கொண்டிருக்கிறது.

தமிழகத்தில் கல்வியறிவு பெற்றவர்கள் 62.7 சதவீதம் பேர். கேரளத்துக்கு அடுத்தபடியாக எழுதப்படிக்க தெரிந்தவர்கள் அதிகம் வசிக்கும் மாநிலம்தமிழகம் தான், காலரை தூக்கி விட்டுக் கொள்ளுங்கள்.

தமிழகத்தின் மொத்த உற்பத்தி மதிப்பு (gdp) 23 பில்லியன் டாலர்கள். சராசரியாக மக்களின் ஆண்டு வருமானம் (per capitaincome) 381 டாலர்கள்.

உழைப்புக்கு சலிக்காத மக்களும் தொழிலாளர்களும் நிறைந்த மாநிலமான தமிழகம் தொழில்துறைக்குஎப்போதுமே மிகுந்த முக்கியத்தும் கொடுத்து வந்துள்ளது. இதன் விளைவு, இன்று ஜவுளி, சிமெண்ட், சர்க்கரை,ஆட்டோமொபைல், இன்ஜினியரிங் தயாரிப்புகள், எலெக்ட்ரானிக்ஸ், தோல், கிரானைட், ரசாயனங்கள், பிராய்லர்கோழி, பெட்ரொகெமிக்கல்ஸ், மருந்துகள், பட்டு, விவசாய விளை பொருள்கள் உற்பத்தியில் முன்னணியில்நிற்கிறோம்.

இந்தப் பொருள்களை பிற மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யும் அளவுக்கு உற்பத்தியில் தன்னிறைவுகண்டுள்ளோம்.

கோயம்புத்தூர், மதுரை அருகே கப்பலூர், சேலம், திருச்சி, ஒசூர், தஞ்சாவூர் மாவட்டம் கக்கலூர், மேட்டூர் ஆகியஇடங்களில் சிறுதொழிற்சாலைகள் அடங்கிய அரசு தொழில் எஸ்டேட்கள் அமைந்துள்ளன.

ராணிப்பேட்டை, ஒசூர், மானாமதுரை, புதுக்கோட்டை, தூத்துக்குடி, கும்மிடிப்பூண்டி, கூடலூர், இருங்காட்டுக்கோட்டை ஆகிய இடங்களிலும் சிறிய தொழில்துறை எஸ்டேட்கள் அமைக்கப்பட்டு தொழில்துறைக்கு பெரும்ஊக்கம் அளித்துள்ளது தமிழகம்.

மின் உற்பத்தியைப் பொருத்தவரை அனல், நீர், அணுசக்தி ஆகியவை மூலம் தமிழகத்தில் மின்சாரம் உற்பத்திசெய்யப்படுகிறது. ஆண்டுக்கு 6,904 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

ஆனாலும், மாநிலத்தில் 2.8 சதவீதம் மின்சார பற்றாக்குறை நிலவுகிறது. கிட்டத்தட்ட அனைத்து கிராமங்களுக்குமேமின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. கிராமங்களில் விவசாயிகளின் பம்ப் செட்களுக்கு இலவச மின்சாரம்வழங்கிய முதல் மாநிலமும் தமிழகம் தான். (இது ஓட்டு பிசினஸ் என்பது வேறு விஷயம்!).

கல்வி விஷயத்தில் வட மாநிலங்களை மூக்கில் மட்டுமல்ல கண், காதுகளில் கூட விரல் வைக்கச் செய்திருக்கிறோம்.தமிழகத்தில் உள்ள மொத்த பல்கலைக்கழகங்களின் எண்ணிக்கை 19. பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை 74.தொழில்நுட்பக் கல்வி மையங்கள் மட்டும் தமிழகத்தில் 96 உள்ளன. பாலிடெக்னிக்குகள் 135. தொழில்துறைபயிற்சி மையங்கள் 490.

தமிழ்நாட்டில் உள்ள முறைப்படுத்தப்பட்ட நிறுவனங்கள் (தொழிற்சாலைகள், ஆலைகள், அலுவலகங்கள் உள்பட)மூலம் சுமார் 90 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.

தமிழ்நாட்டை பின்னிப் பிணைந்திருக்கும் ரயில் பாதையின் நீளம் 4,113 கி.மீட்டர்கள். நல்ல ரோடு இருக்கும்மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. (அப்படியெனில் பிற இந்திய மாநிலங்கள் குறித்து கொஞ்சம் கற்பனை செய்துபாருஙகள்!). தமிழகத்தில் உள்ள சாலைகளின் மொத்த நீளம் 36,727 கி.மீட்டர்கள்.

சர்வதேச விமான நிலையம் உடைய மிக சொற்பமான மாநிலங்களில் தமிழகமும் ஒனறு. சென்னை விமான நிலையம் ஒரு சர்வதேச விமான நிலையம். இது தவிர சேலம், திருச்சி. கோயம்புத்தூர், மதுரை, தூத்துக்குடி,மற்றும் சென்னையில் உள்நாட்டு விமான நிலையங்களும் உள்ளன. இதில் தூத்துக்குடி விமான நிலையம்விமானத்தை பார்த்தே பல வருடங்கள் ஆகிவிட்டன. இங்கு வாயுதூத் விமான சேவை இயங்கி வந்தது. அதுவும்நிறுத்தப்பட்டுவிட்டது.

தமிழகத்தின் பெரிய துறைமுகங்கள் 2. சென்னை, தூத்துக்குடியில் உள்ள இந்த துறைமுகங்கள் தவிர சென்னைஅருகே எண்ணூ

தமிழ்நாடு முழுவதும் 1,603 டெலிபோன் எக்ஸ்சேஞ்சுகள் உள்ளன. இதன் மூலம் 12 லட்சம் தொலைபேசிகளுக்குஇணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

எலெக்ட்ரானிக்ஸ் பொருள்கள் தயாரிப்புக்காகவே தனியாக தொழில்துறை எஸ்டேட்கள் அமைக்கப்பட்டுள்ளன.பெருங்குடி, திருவான்மியூரில் (டாக்டர் விக்ரம் சாராபாய் தொழில்துறை பூங்கா), சோழிங்கநல்லூரில்(எலெக்ட்ரானிக் சிட்டி) ஆகிய இடங்களில் கம்ப்யூட்டர் உதிரிப் பாகங்கள் உள்ளிட்ட எலெக்ட்ரானிக் பொருள்கள்உற்பத்தி செய்யப்படுகின்றன.

என்னடா சாப்ட்வேர் வளர்ச்சி என்று சொல்லிவிட்டு அரசுப் பொருள்காட்சியில் தொழில்துறை சார்பில்வைக்கப்படும் ஸ்டாலில் சாதனைத் தமிழகம் என்ற பெயரில் சுய புராணம் பாடுவார்களே, அதே மாதிரிதொழில்துறை சாதனைகளை நீட்டி விளக்குகிறார்களே என்று யோசிக்காதீர்கள்.

ஏதோ 4 கம்ப்யூட்டர் நிறுவனங்கள் தொடங்கப்பட்டன, சாப்ட்வேர் ஏற்றுமதி தொடங்கிவிட்டது என்பதல்லஉண்மை. இன்று சாப்ட்வேர் வளர்ச்சியில் தமிழகம் நிமிர்ந்து நிற்கிறது என்றால், அதற்கு மேலே படித்தீர்களேஅந்தப் பின்னணியும் முக்கியமான காரணங்களில் ஒன்று.

இந்த பின்னணியை மனதில் நிறுத்திக் கொண்டு தமிழக சாப்ட்வேர் வளர்ச்சி குறித்தும் அரசு அடுத்து செய்யவேண்டியது என்ன என்பது குறித்தும் ஆலோசிப்போம்.

கடந்த வார ஐ.டி. தமிழகம் கட்டுரை

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X